Saturday 30 November 2013

காதலாகிய தருணங்கள்தான்..


இது உண்மைச் சம்பவம் காதலாகிய தருணங்கள்தான்..... யாருக்கோ நடந்த சம்பவம்... இது... எனக்கு நடந்தாய் பாவனை செய்து எழுதுகிறேன்....

என் எண்ணங்கள்

என் எண்ணங்கள் 
நரைத்து உன்மீது படுகிறது.
நீர்த்துளியில்எரியும்உன்காதல்மட்டும்அதை அறிந்துவிடாமலிருக்கிறது....

என் வயது முதிர்து போன இளமைக்குள்....
உன் தீரா எரி பொருளைக் கொஞ்சமேனும் நிரப்பு ...
அது தீர்ந்து 
போனதற்கு நான் காரணமில்லை
அதற்கு உன் எண்ணங்களின்
வற்றுதல் தான் காரணமாய் இருக்கும்

Tuesday 26 November 2013


எனது ஓவியங்களலில் சில...
இந்த ஓவியம். -26 -11-2013அன்று வரையப்பட்டது. 


என்னில் மிதந்து










என் கண்ணாடி விழிகள் கூட


மறுத்தது வலிகள் கடப்பதாய்


எண்ணும் எண்ணங்களை இல்லை...அது


பரவியே முதல் விழி திறந்தது






உனக்குள் திறந்ததை அது இசைதான்


முழுமையும் தேடு


வாசல் கதவுகளற்றும் சில


துவாரங்களினாலும் உள்செலுத்து


உடைந்துவிடாது.........உனக்குள் திறக்கப்பட்டதா


இல்லை உடல் நனைத்த இரவுகளால் உருவானதோ


இல்லை அது இருந்தது....




இரு இமை திறக்கிறது உள்ளே விழிகள் அற்று


பார் ... முகாந்திரமான விரிசலான இசையுடன்


வெளிவருகிறது...



அது. .. பேரிரைச்சலுடன் உன்னை மோதி இறக்கிறதா


உயிர் கருக் கலைந்து வாழ்வில் மோதுகிறதா


அழிக்கிறதா மிச்சமிடாமல் இனிய தருணங்களை


மிகவும் அன்போடு திறக்கப்பட்டது


கனவு மெய்க்காவலில் இருந்து தப்பிக்க


ஏதாவது உற்பத்தி இசையை கடன் கேட்கிறதா..




அதுதான் நீ மயக்கம் தெளிந்த


பொழுதுதான் ஞாபகம் அதற்கில்லை


அதுதானே ஞாபகததில் வைத்துக் கொள்ளட்டும்..

Saturday 23 November 2013

கலீல் ஜிப்ரானின் கவிதைகள்

கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1]அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர்,கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
உன் திரும்ப மறுக்கும்
கண்ணசைவுக்குள் வாழ்கிறது.
என் முதலான உயிர்.

Friday 22 November 2013




என் நாட்டு அரசியல் வாதிகள்
ஏழ்மையை அழுக்கென நினைத்து
துடைக்க மறந்து போகிறார்கள்.


Tuesday 19 November 2013

அதோ நீ மேகமாய்......


அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்

இன்னும் வரையப்படாத கோடுகளை

பொய் பிழைத்தால் சரியாகிவிடும்

எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது தவிக்கும் உணர்வு

நான் என்னைக் கடக்கயில் உனக்குள் விழுந்து விடுகிறேன்.

இதோ ஒரு புதிய மனிதன்



நியமில்லாது நிழலைத் தொடர்வது போல்
பறக்கிறது என்னில் மோதி ஒன்றுபார் அதையே நிறம்மாறி தொடர்கிறேன்.....

Monday 18 November 2013

சலீமுனான்

மொழிகள் பிழைபடுகின்ற 
குழந்தைகள் போல் பாடல் பாடுகிறது
எப்பொதும் போலல்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறது..
முகார ஒலிகளைப் புறந்தள்ளும் 
பாடல்வரிகள் .....

மழையிலும் நனையா காகிதம்

அந்த இடத்திலே கிழித்து
எறிந்த பாடல் வரிகள் போல்
அங்கேயே மீண்டும் அங்கேயே மீண்டும்
படிக்கமுடியாதபடி ....

Saturday 16 November 2013

வாழ்வின் சிந்தனை சுருக்கம்பற்றி


நாறாய்ச் சேறு பிழிவது 
அது ஒரு இறவாப் பிண்டம்
கனதியானதும் மெதுவாய்ப் படித்தாலும்
கண்களைத் தின்றும் 
சிலவேளை நசித்தும்
காரணங்களற்ற 
பார்வைகள் கொடுத்தும் ஆனால்
கருத்துக்கள் ஆழமானவையாகவும்
நிறுத்து!!! 
ஒருவனின் கேழ்வி இது.. 
சிந்திவிடாதிருக்கும் நனைந்து தொங்கும் ஒரு
ஈரமற்ற துணி போலா?
அது காயமற்று உயிரற்றிருக்கும் உடலா?
பதிலளிக்கிறான்.
இல்லை !!!!
வெறுமையுடன் செழிப்பாயிருக்கும்
இந்த வாழ்வுதான் அது.......

நினைக்காதல்

இருளின் ஸ்பரிஸத்தை
ஏற்றுக்கொண்டு விண்மீன்கள்
துளிகளில் முகர்ந்து கொண்டு வீணையின் இசையுடன்
தோனிப்பாட்டுக்கிழியும் தொகுதிகளாய்
பறந்தபடி பாடிச்செல்கிறது.
ஓர் பறவை....

அவள் பார்வை..
எனக்குள் நிழலாடுவதைப்
பார்த்த காரணங்களினாலே..

நானும் நிழலில்லா இறப்பும்

நானும் நிழலில்லா இறப்பும்
**********************
எத்தனைபேரோ என் இறப்பின்
இரசனை தொட்டு உணர்வது
எத்தனை அடுக்காய் உடல் பிளக்கப்பட்டது பார்
அவர்கள் மனமெல்லாம் தெரு நாய்களின்
கழிவறை போலெ ....

Friday 15 November 2013

மூங்கிலின் வாசலிலே


என் கண்ணாடி விழிகள் கூட
மறுத்தது வலிகள் கடப்பதாய்
எண்ணும் எண்ணங்களை இல்லை...அது
பரவியே முதல் விழி திறந்தது

Thursday 14 November 2013

கற்பனை ஓவியம்


கொழுந்துவிட்டெரியும்
அந்த நிலவுக்கும் தெரிகிறது ஒரு பயணியற்ற
விண்கலம் நானென்பது
அல்லது வீண்கலமென்று

ஈழத்தவன்......


புத்தனுக்கும்
சில தமிழருக்கும் தெரியாத 
தலைகள் இவை...



அலைகளிலே கணவன் 
மீன்களெங்கே தேடுகிறான்
மறுநாள்!!
கரைகளில் அவன் 
உடலெங்கே தேடுகிறாள்..ஒருத்தி


வெற்றுப் பாத்திரம்தான்




நின்றால் மட்டுமே
ஓடிக்கொண்டிருப்பதை
அறிவாய்.......................


நீ வெற்றுப் பாத்திரம்தான்

அதை இன்னொருவர் நிரப்ப
அனுமதியாதே.................

உன்னிலே தொடங்கு

 

மனதிலிருந்து விலகிச்செல்பவைகளை
மனிதர்களால் விடமுடியாதென்பதை
காதல்எப்படியோ அறிந்திருக்கிறது....
பெண்களில்/
காயத்தினாலே சுகிப்பு...
காயமற்ற சுகிப்பு........
இதில் ஏதாவதொன்றில்
ஆண்கள் உயிருடன் எரிதலே நியதி...

ஓஷோ படித்த கடவுள்

ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவஞானி சொன்னதைக் கீழே சில குறிப்பிடுகின்றேன் அதிலிருந்து புரியும் ஒரு துளியின் தன்மையே புகட்டிவிடும் ...ஒரு சமுத்திரத்தைப்பற்றி..

கவிஞனின் காதலி

உன் சிரிப்பொலிகளாலெ
நம் உயிரிரண்டும் புணர்கிறதே..எனக்குள்

Saturday 9 November 2013

என்னில் மோதுகிறாய்


நீ ராசிபார்த்து
என்னில் மோதுகிறாய்...

உன்னில் பட்ட
சினங்கள் எல்லாம்
என்னை கொஞ்சும்

ஓர்நாள்...
என்னுலகம்
உன்னைத் தேடிக்கொண்டு
உன் பகைமையெல்லாம்
என்னை நாடிக்கொண்டு

உறவென்று எதுவும்
இல்லை உன்
பார்வைகளைத் தவிர

போ ..நீ
எனறு சொல்வது ஒரு
போதும் நானாகிப் போகாது

என் உயிரற்ற உடல்
வேணுமென்றால்
எனக்குத் தெரியாமல்
கூறும் தான் உலகை விட்டு
விடுதலை பெறுவதற்காய்

பறக்கத் துடிதத சிலந்திகள்



                                     
தோட்டாக்கள் துளைக்காத
இரும்பு இதயங்கள்.

Friday 8 November 2013

என் மனக் குமிழிகள்



எல்லாக் குமிழிகளையும்
தொட்டு உடைக்கிறாய்
ஒன்று மட்டும் தொடாமல் ...

Thursday 7 November 2013

என்னில் நீ

உயிர் பிடித்து
நடக்கிறது..
உன் முழுமையடையாத
முத்தங்களினை.........

எவருனக்கு.
கற்பித்தார்
கோபங்களிலும்
மோகம் வளர்ப்பதற்கு...


என்னில் நீ
மூழ்கும் போது
மட்டும் உறவுகளின்
வதனம்
தெரிகிறது.......

தடவிநீ
துளிர்கொள்
மெல்ல என்
இதயத்தை..

பின்னலைத்
தேடுகிறேன்..
உடலினிலெல்லாம்
கடவுளின் கலகம்.

தொடப்படாமல்
முடிவுகள்
இருக்குமென்றால்...

அந்த வரிசையில் நானும்
நிற்பேன் வரிசையின்
முதல்நிலையில்

நினைவுகளின்

காகிதங்கள் 
மரங்களின்
இலைகளினோரமாய்
உரசுகிறது.

எங்கிருந்து
பிரிபட்டனவோ
அதிலேதான் இணைய 
எத்தனிக்கிறது.யாவும்
...................................................................
.............................................................
நினைவுகளின்
ஓரங்களில் நிகளும்
ஆத்ம சஞ்சரிப்பை
புரிந்துகொண்டாலன்றி.

உங்களிடத்தில்
உண்மை அன்பு
தொன்றாது...

Wednesday 6 November 2013

பொய்யா

காதலும்தான் பொய்யா
காதலும்தான்
பொய்யா

என்மனதாகினாய்



என்மனதாகினாய்



விராகினி.....
தொலைவாய்

உணவு

பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...

Monday 4 November 2013

பிரம்மனின் பிழை


                                                     பிரம்மனின் பிழை
   
பெண்மை இதயம்
தேடக் குழைத்தான்
நம் இதயம்....

என்னை கொன்று


தானே என்னைகொன்று 
பொழுதுபோகிறது திரும்பிஉன்னிடம்..
நானே அழிவதுபற்றி 
உன்னைத்தேடும் வார்த்தை
உன் நினைவுகளைஎன் 
மனதுள்திணிப்பது வீணேஆகிறது..
நானே சொல்கிறேன்நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்

Sunday 3 November 2013

அன்பு

எத்தன்மையான
அன்பில் நான் விசுறப்பட்டாலும்
இறுதியில்......
உனக்குள்தான்
விளுந்துவிடுகிறேன்..
அதில் கடவுளுக்கும்
ஒருஆனந்தம்..

என் மனப் புத்தன்.



என் மனப் புத்தன் மீது
கற்களினால்.....
அடிபட்ட காயங்கள்

Thursday 31 October 2013

புல்வெளியில் ஓர் மரணிப்பு.............





................புல்வெளியில் ஓர் மரணிப்பு.............


நரம்கொன்று உயிரெல்லாம்
சருகாக்கிறாய் உடல்தனை
உன் உறுப்புக்களாய் போர்த்துகிறாய்
சூரியன் காட்டி என் பொழுதெல்லாம்
உயிர்போகும் தவிப்புணாத்துகிறாய்.


விழிக்கக் கற்றுத் தோற்றுப் போன
இரவுகளை நீ மனனம் செய்யச்
சொல்லி மண்ணால் என்னை மேவி
உன்னால் என்னை மறைக்கிறாய்
பார்க்கும் சுவடுகளிடமெல்லாம்
மிதிபடுகிறேன் நான் இன்னொருமுறை .


ஊடுருவிச் செல்கிறேன் நான் இயேசுவின்
தோல் போர்த்தப்பட்ட சிலுவைகளை நீ
உக்கிப் போர்த்தியிருக்கிறாய்.உன்மேலே
இடையிடையே ஞானிகளின் ஆடைகளும்
நெய்யப்படாத குப்பைகளாக்கி
உக்கவைத்திருக்கிறாய்................


சில உயிரணுக்களுடன் வந்து இன்னும்
ஆழமாய்ப் பயணிப்பது இங்குதான்
முதல்தடவை ..புவிப் பிளவுகளில்
உனது உடல் தேவையற்றதாகிறது
உனது இறப்பும் அங்கே ஒரு புள்ளியாகியது......


சேர்ந்த அனுபவங்களுன் உயிர்ப்போருள்
புல்வெளியில் மரணிப்பதை இறைவனிடம்
சொல்லிச் சிரிக்கிறேன் முதலில் அடம்
பிடித்தனான் ...இப்போது...............!!!!!

ஆசைகள் நோக்கி ஓலமிடும் உணுர்வையும்
செவிமடுப்பது இல்லை பொறாமைக் காறர்கள்
கண்களில் எரிவதுமில்லை விழுவதுமில்லை
விழுந்தால் தாங்கிப் பிடிப்பதுபோல் நடித்து
கீழே உதைப்பவர்களுமில்லை...


ஏதோ ஒன்றை விழுங்கியது போன்ற உணர்வுடன்
புல்வெளியில் மரணித்த நான் தாகமாயிருக்கிறேன்
..........................................................................................

உலகம் மறந்த கனவு





 உலகம் மறந்த கனவு 

         ♥♥

உலகம் மறந்து போனகனவாகிறது என் கவிதைகள்தனக்கு பேசத்தெரியாதென்றுஊமை தெளிவாய்ப் பேசுகிறதுஎன்றுதான் கூறினேன்இதைப் பிழை எனகின்றனர்..நீ நம்ப மறுக்கும் உலகத்துள்தான் உண்மைதினமும்நடைபோடுகிறது...என் மனக்கடலின் அருகேமூழ்கிச்செல்லும் படகுகளேஅதிகமாய்ச் செப்பனிடப்படகிறதுஅதனைக் கொண்டுதான் கடக்கிறேன்மீதிக் கவிதைக் கடலை.அதுதான்உணருவதற்கு சற்று மனம்உனக்குக் கனக்கிறது..

  .தோல் போர்த்திய சிலுவை..

ஓடி ஓடி உழைப்பவர் கடவுளின்தன்மைக்கு உடல் சோர்வைக்காணிக்கை இட்டனர் இனோர் பிறவி கடக்க பயந்து கிடந்து புரண்டனர்சிறுகச்சிறுக உனக்குள் படைக்கிறான்தன்னை மறக்காமலிருக்கவிரக மோகத்தைக் பாய்ச்சும்பலவித பொருட்களை..................கண்காணித்து மடியும் சிலந்திகள்போல தினந்தோறும் உன்கண்காணிப்பும் பலனற்றுப்போகும்அதன் தன்மைக்கு முன்னால்...தீண்டித்தீண்டி அதைத் தாண்டாதுசெல்லும் மண்தனில் புரளும் மானிடனேஉன் புளுக்களில் சிலவற்றுக்குமானிடத்தன்மையும் பொறிக்கப்படுகிறது....வெண்ணிறம் படரும் சிரசுகளோடுதோல்போர்த்திய சிலுவைகளேசுமந்து செல்கிறது இன்றும்மானிடம் தாண்டி ஓடித்திரிபவரை....      




மௌன சோகம்






என் இதயத்தில்
புரளும் நீர்ப் பாம்புகளுக்கு..

Thursday 17 October 2013

திரும்பி நீ பார்க்காதே



நெருங்குதல் போலே
விலகும் காதல்
நெருங்கத் தொடங்கி அடுத்து
விலகவும் செய்யும்......
மனதின் வேலை
அடுத்தது செய்வதே...........

...........................................

2

வேண்டுமென்று எதையாவது

விட்டுச்செல்லுங்கள்

அடுத்த பிறவிக்கல்ல

.............................................

இங்கு வாழும் மனிதம்

வரலாற்றில் உன்னை

வேணாமென்பதற்காய்

...........................................


3
திரும்பி நீ பார்க்காதே


நெடுங்காலப் பிரிவினையால்
என் மனமந்தரமாக்கினாய்
நட்சத்திரங்களிலும் தேடிப்பார்த்தேன்
உன் தொலைந்த முகவரியை

உன் மெல்லிய
சலனத்தை கொஞ்சம் நிறுத்து
என் அழுகின்ற மனதை
அன்பால் சொல்ல வேண்டும்

உன் வார்த்தைகளை
முத்தங்களாய்ப் பிரவாகிக்கும்
கற்பனைகள் இன்னமும்
வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

என்னை மீண்டும் தரமறுக்கிறாய்
சந்தேகம் கொள்கிறது நம்காதல்
நான் உன்னிடம்தானா என்னை
இழந்தேனென்று...

மறந்து போகாதே
உன் தலையணையைக்கூட
எனக்குப் பரிசளித்தாய்
அகன்று விரிந்த உன் மனவானமாய்
எண்ணிஅதிலேதான்
உறங்குகிறேன்........


போகும் தெருக்களின்
வளியே நானும் வருவதானால்
திரும்பி நீ பார்க்காதே
மீண்டுமொரு
கற்பனை துளிர்விடுவதற்கு
என் மனம் ஒரு
போதும் ஏற்றுக்கெள்ளாது

உன்கணில் எனை வைத்து

நீர்த்தெடுத்த சிவந்தமண்ணால் உனை
சேர்த்துக் குழைத்திருக்கிறானிறைவன்.
வார்த்தெடுத்த வகுடுமுதல் நகம்வரை
நாலா பக்கமும் ஒளிஉருகும் வதனம்

வெள்ளிகள் பிரசவித்த உன் இதயம்
பின் என்ன பிடரிவழி துளைத்தாலும்
பிய்த்தென்னைக்கொய்யாதோ.

நெறிபிறழாத உன்கணில் எனை வைத்து
அரசியல் சூழ்ச்சி செய்கிறாய். நான்
சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்என் ஈழ அகதிகளாய்

உதிர்த்து நீ விரித்துவைத்த தேகமெல்லாம்
மல்லாக்கத் திரிகிறது என் மோகமெல்லாம்

உதடுவழி ஒருசொட்டுச் சிந்தாது கன்னக்
கனிமமெல்லாம் உறுஞ்சுகிறாய் மௌனமாய் நீ

எத்தி எத்தித் திணறிக்கொண்டு விக்கிநான்
போகிறேன் முடிவுஅறியா மூச்சுக் களைப்பால்.

விழித்து நீ இன்னமும் பார்க்கவில்லை..
சலித்துக்கூட இன்னும் போகவில்லையே.நான்



நீதானே .......


நீதானே
விடுதலை அறியாத
தருணங்களை என்
இதயத்திறகுக் கற்பித்தாய்....

நீதானே
முழுமையடையாத
காதலை என்
உணர்வுக்குள்
விசிறினாய்...............................

நீதானே
அலைந்து திரியாத
என்னுணர்வுக்குள்
வாழ்வதாய் நினைக்கும்
காதலைக் கரைத்தாய்.................

நீதானே
என் முன்னால்
செல்லும் பாதையைக்கூட
கற்பனையால்
இரசிக்கவைத்தாய்.....................

நீதானே
போதுமெனக்கூறித்திரிந்த
என் அறிவை தேடலுக்குள்
தொலைத்தாய்...................................

நீதானே
என் மூச்சுக்காற்றை
ஏழனம் செய்துவிட்டு
என்மூச்சுக்குழாயினுள்
விண்சாரலை நிரப்பினாய்...........


நீதானே
நானாகும்
தருணங்களையும் நீயாகும்
தருணங்களையும்
மறைத்தாய்......

நீதானே
எனக்குள் யாருமே
உணராத ஒன்றைப்
புகுத்தினாய்.....


இப்போதுபார் உன்
திருமணப்பத்திரிக்கையின்
முன் நான்மட்டும்
மண்டியிட்டுக்கிடப்பதை.....

Monday 30 September 2013

நயமும் வஞ்சமாய்த் தீரட்டுமினி
பொருள் வரி சாறுமினிவேண்டாம்...
மொழிஒரு பொருள் வடிவுமினிவேண்டாம்...
புதுக் கவியினிக்கலையட்டும்...
தனியொரு புத்தியில் மனதடுமாறும்
கவிபுனையதுதரமாகும்..............






தனிமை ஒரு காடென்கின்றனர்...
அதற்குள்தான் இலகுவாய் தவம் செய்ய முடியும்...
உன்னை நோக்கி வீசும்
மனப் புயலைப் பற்றிக்
கேட்பாயானால்.. நான்
என்னை நோக்கி வீசும்
உன் மனப் புழுதிபற்றியும்.
கூறுவேன்.
.............................................
தோல்விகளை விரிவாய் நீ கற்றுக் கொள்ள
இறைவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்...
இடையில் வந்து தகர்த்தெறிவார் ... வெற்றியின் மூலம்......


சகியே என் உயிரில்
மெல்ல நீ நிரம்பு....

சுகிக்கட்டும் மெலிதாய் 
ஓடு என் நரம்பில்...............

என் உயிர் ஊனக்காற்று..
கரைந்து போகும்
மெல்ல நீ இதயம் உரசு......

என் உள்காற்றில்
மெல்லென நீ பேசு........

என் பிறப்பு
உறுதிகொள்ளட்டும்

உன் மிருதுவான சலனம்
நெஞ்சில் நிரப்பு......

இறந்துபோகுமளவுக்கு
வாழுமென் இதயத்தை
மேவு உன் கோபமற்ற
வார்த்தைகளால்.................

காயத்தினாலே


காயத்தினாலே 

மனதிலிருந்து விலகிச்செல்பவைகளை
மனிதர்களால் விடமுடியாதென்பதை
காதல்எப்படியோ அறிந்திருக்கிறது....
பெண்களில்/
காயத்தினாலே சுகிப்பு...
காயமற்ற சுகிப்பு........
இதில் ஏதாவதொன்றில்
ஆண்கள் உயிருடன் எரிதலே நியதி...

கலங்கினும் .......நீ விழிநீர் சிந்தினும்
தாண்டிக்கொண்டேதானிருக்கும்
அடுத்த கட்டத்தை உன்வாழ்வு..............
உன் காதல் சிகிச்சைக்கு
அனேகமாய் என்னிதயத்தின்
குருதியே.. உறிஞ்சுகிறாய்...

குறைவாய் உண்மையை விழுங்குகிறார்கள் பெண்கள்
அதனால்தான் அதிகம்
பொய்களை
வெளியிடுகிறார்கள்...ஆண்களிடம்.....


கற்பனை வெளிகளில் சில மனிதர் கவிதை
நிரப்புகின்றனர்.அதிலே மனிதரில் சிலர்...
கவலை நிரப்புகின்றனர்.......

Sunday 22 September 2013

முடிவற்ற சுதந்திரம்

காற்றுக்களின்
இடைவெளியில்
தொடப்படாத
மூச்சுக்காற்றாய்
என்னுள்... நீ

முடிவற்ற சுதந்திர 
மூச்சொன்று என் 
இதயக்  காற்றை
கடன் கேட்கிறது

அவள் குற்றத்தில் 
சிலசில கறைபடிவுகள்
என்றால்
நான் அவளுக்காய்
வெளியிடத் துணியும்
சுதந்திரமே...

என்றோ ஒரு நாள்
என் எழுத்துக்கள்
இறந்து போகலாம்
என் கனவுகளும்
சிதைந்து போகலாம்

காரணம் உனக்காய் 
வெளியிட்ட 
சுதந்திரக்காற்றை
நீ ஏற்காததுதான்
காரணமாயிருக்க முடியும்.

பலகாரணங்களை 
நான் முன்வைப்பேன்
என் காதல் பின்தங்கிச்
செல்வதற்கு.

ஒன்று உன் உடைமைகள்
வெளியிடும் குளிர் காற்றில்
என்னை மெல்லப் 
பனிக்கச் செய்
இல்லை..

என் கனவுகள் உறங்கும்
உன் இதயத்துக்குக் கூறு
என்னை வெறுப்பதற்கான
காரணங்களை..















கவிதை 3

கவிதை 2

கவிதை 1


மனது...........










கடவுள் விழுமியங்கள்
சிலவற்றையே 
பேணுகிறது..

Saturday 21 September 2013

காதல்

{மனம் பொறி வழிப்போகாது நிற்றற் பொருட்டுஉணவை விடுத்தேனும் சுருக்கியேனும் கடைப்பிடித்தலே விரதமாகும்}


மனதைப் பொறிவழி அலைய விட்டு மனதைக்கொடுத்தேனும் கனவைவிடுத்தேனும் கடைப்பிடித்தலே காதலாகும்.................

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்

கனவிலும் ஒர்நிழல்




உன் வெளிச்சாயல் 
என் அகம்
கிழறிச் செல்கிறது
தேய்ந்து கொள்கிறதென
உன் கண்களைப்
புகைப்படத்திலும்
பார்க்க மறுக்கிறென்
......................................
................................
என் கனவின் ஆயுளை
அதிரிக்கிறாய்
உன் புன்னகை மூலம்
உன் முகத்தினோரமாய்
ஒதுங்கும்
தலைமுடிகளுக்கு
மட்டுமே தெரியும்
நான் உனைப்
பார்த்த தடவைகளின்
எண்ணிக்கை..........
..........................................
.............................
கூட்டத்தின்
நடுவில்
எல்லோர் பார்வையும்
உழறுகிறது
உன் பார்வை மட்டும்
என்னை நோக்கி
மௌனிக்கிறது.
........................................
..................
உன்னால்
வாய்பேச
முடியாதென்கின்றனர்
உண்மைதான்
குழந்தையில் நானும்
அப்பிடித்தானிருந்தேன்
ஏனெில் எனக்கு நீ........
 


காதல் கனதியின்
நிழலில் படுகிறது
ஒரு மழைச்சாரல்.
............................
அங்கொன்றுமிங்கொன்றுமாக

துளிகளைத் தாவிப்

பிடித்தபடி.

...............................
வாழ்வின் வெறுமை
சிந்தவிடாமல்

பிடிப்பது பற்றிய..

சிந்னையில் கழிகிறது.

துடினமான
என்வாழ்வு................

                                                                  என் மூளைக் கனவுகள் எட்டிப்பார்க்கிறது...இதய யன்னல்களினிடையில்உனக்கான கவிதைகள்எங்கேனும் விசிறப்படுகிறதா என்று................................................