Saturday 21 September 2013

காதல்

{மனம் பொறி வழிப்போகாது நிற்றற் பொருட்டுஉணவை விடுத்தேனும் சுருக்கியேனும் கடைப்பிடித்தலே விரதமாகும்}


மனதைப் பொறிவழி அலைய விட்டு மனதைக்கொடுத்தேனும் கனவைவிடுத்தேனும் கடைப்பிடித்தலே காதலாகும்.................

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்

கனவிலும் ஒர்நிழல்




உன் வெளிச்சாயல் 
என் அகம்
கிழறிச் செல்கிறது
தேய்ந்து கொள்கிறதென
உன் கண்களைப்
புகைப்படத்திலும்
பார்க்க மறுக்கிறென்
......................................
................................
என் கனவின் ஆயுளை
அதிரிக்கிறாய்
உன் புன்னகை மூலம்
உன் முகத்தினோரமாய்
ஒதுங்கும்
தலைமுடிகளுக்கு
மட்டுமே தெரியும்
நான் உனைப்
பார்த்த தடவைகளின்
எண்ணிக்கை..........
..........................................
.............................
கூட்டத்தின்
நடுவில்
எல்லோர் பார்வையும்
உழறுகிறது
உன் பார்வை மட்டும்
என்னை நோக்கி
மௌனிக்கிறது.
........................................
..................
உன்னால்
வாய்பேச
முடியாதென்கின்றனர்
உண்மைதான்
குழந்தையில் நானும்
அப்பிடித்தானிருந்தேன்
ஏனெில் எனக்கு நீ........
 


காதல் கனதியின்
நிழலில் படுகிறது
ஒரு மழைச்சாரல்.
............................
அங்கொன்றுமிங்கொன்றுமாக

துளிகளைத் தாவிப்

பிடித்தபடி.

...............................
வாழ்வின் வெறுமை
சிந்தவிடாமல்

பிடிப்பது பற்றிய..

சிந்னையில் கழிகிறது.

துடினமான
என்வாழ்வு................

                                                                  என் மூளைக் கனவுகள் எட்டிப்பார்க்கிறது...இதய யன்னல்களினிடையில்உனக்கான கவிதைகள்எங்கேனும் விசிறப்படுகிறதா என்று................................................