Thursday 6 March 2014

விலகுவதாகும் மனதில்


விலகுதாகும் மனதில்
தொலைவினிலாடும் முகம் நோக்கி
என் இதயம் கிறங்கி சுற்றுகிறேன்....

தொலைவதாகும் என் எண்ணங்களை விட
நெருங்குவதாகிறது மோதலைப் பாதுகாக்கும்
உன' ஒரு சொல்.......................

நானும் பிணமாகித் தொலைகிறேன்
உன' வியாக்கியானங்களால்....

நீ இனி என்னுள் வந்து  பாடு
மொழிகளற்ற புதுமையான இசையுடன்......


Wednesday 5 March 2014

நிலைகாணாமல் தவிக்கிறது


ஒவ்வோர் முறையும் தடைகள் தாண்டி துடிக்கிறது ஏதோ ஒன்று தேடி 

நிலைகாணாமல் தவிக்கிறது

உள்ளே ஆழமாய்ச் சென்றாலும் மனக்

கோது மட்டும் நின்று ஊசலாடுகிறது

மனங்காணும் இந்த வாழ்க்கையின்

சிறு தேடல் பொய்யா

என ஊகம் கொள்ளும்

மனமும் பொய்யாகிப் புண்ணாகிறது....



இனியும் இரவுகள் ஏறி காலம் கழியுமோ

இந்தப் புளுக்களுககு

வடுக்களுக்கு மட்டுமே

தெரியும் இந்தப் புனித உலகின் விழிப்புப் பற்றி

மோதுகின்ற கண்களில் தேடல்கள் தொலைந்து கிடக்கிறது

வாடுகின்ற மனங்களையே கண்களும் காண்பிக்கிறது

எல்லாப் புனிதங்களும் கரையொதுங்கிக் கொள்கிறது

பயனில்லாச் சருகுகளை தேடிக்களைத்துப்போனேன்

என எண்ணிக் தொனித்த குரலில் பாடுகிறது தான்

விரும்பிய பாடலை மனது....................




எத்தனை முறை உலகத்துக்காய் நான் தலை சாய்த்திருக்கிறேன்

என் இலட்சியம் மறந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்

அது வெறும் சாரல்கள் போல் எனக்குள் வந்து இடையிடையே

தன் மகிழ்ச்சிகளை என் மீது பொழிவதில் எனக்கு

உடன்பாடல்லை.....


இங்கே வற்றாத குளிர் மேகத்தில் அடைந்து கிடக்கிறேன்

கொஞ்சக்காலம் மனித முகங்களை பார்க்காது....













Sunday 2 March 2014

என்னைப்போல் உனக்கும்.........


அப்போது உலகமும் 
இந்த உயிர்களும் புதியதுதான்
தவன்று எழும்பி நடக்க தொடங்கிய போது
அவரை வரவழைத்து அதிசயமான
கதைகள் சொல்ல வைத்தார்கள்
நிலாவைப்பற்றி அதிகமாக
பேசினார்.....

                                                           
அவர்........
வீட்டிலே சில காலம் முடங்கிக்கிடந்தார்
நான் பாடசாலைக்கு செனறு கொண்டிருக்கிறேன்
.இப்போது
என்னை அவருடன் பேச அனுமதிப்பதில்லை



பின் ஒரு கால இடை வெளியில் கல்லுரி முடிந்து
வருகிறேன் ..
மாட்டுத் தொழுவத்தருகில் ஒரு கூடாரம்
அவர்... அங்கே முடங்கிக் கிடந்தார்
என்னைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை.....


.....பல காலம் உருண்டொடுகிறது எனக்கும் திருமணமாகியது
எனது குழந்தையும் நடக்கப்
பழகிக் கொள்கிறான் ....
இப்போது
எனது தந்தை நிலாவைப்
பற்றிய கதைகள் மடியில் உட்கார வைத்து
சொல்லிக் கொண்டிருக்கிறார்......