Sunday 20 September 2015

மொழி பெயர்ப்பு கவிதைகள்


மொழி பெயர்ப்பு கவிதைகள்


*காதலே
காதல் நம் இருவரையும் எரித்தது
தீய்ந்த இடத்தில் விழுகிறது மழைத்துளி
உன் ஈர்ப்பு விசையில் தளர்கிறேன்
உனக்காகக் காதலைக் கொல்ல மாட்டேன்
அது என்னால் முடியாது தான்
அப்படியே இருக்கட்டும்
அறுக்கப்பட்ட பயிரெச்சம்
முளைக்கிறது வயலில்
உன் முகம் கழுவும் மழைநீர்
முறுகல் மேகத்துண்டிடை
வானில் தொங்குகிறது
மெல்லிய நிலவு
அந்தப் பாதையில் போ
தப்பாது உனது பயணம்.
- ராபர்ட் பெரால்டு.

*எப்பொழுதும் முதல் முறைதான்

காதல் கதைகளைப் போல்
சொல்கிறோம் எங்கள்
யுத்தக் கதைகளை
வெகுளியாய் இருக்கின்றன
அவை முட்டைகளைப் போல்
நகரத்தைச் சுற்றிய சுவற்றில்
எப்பொழுதும் முதல் முறையாக
மீண்டும் சந்திப்போம் நினைவிகளை.
-கபேபா படெருன்.

*ஓரே காதல்
உன் மீது
மீண்டும் மீண்டும்
காதல் கொள்வதை
என்னால் நம்ப முடியவில்லை.
ஓவ்வொரு காலையும்
மறக்காமல்
உனது துப்பாக்கியை
தோட்டாக்களால் நிரப்பி
சுட்டுத் தள்ளுகிறாய்
சுக்கு நுôறாகிறது
என் மென்னுலகம்.
-கேரி கும்மிஸ்கி
.
-ஆதாரம்:- கருப்பாய் சில ஆப்ரிக்க மேகங்கள்
மொழி பெயர்ப்பு: திரு.மதியழகன் சுப்பையா.