Sunday 22 September 2013

முடிவற்ற சுதந்திரம்

காற்றுக்களின்
இடைவெளியில்
தொடப்படாத
மூச்சுக்காற்றாய்
என்னுள்... நீ

முடிவற்ற சுதந்திர 
மூச்சொன்று என் 
இதயக்  காற்றை
கடன் கேட்கிறது

அவள் குற்றத்தில் 
சிலசில கறைபடிவுகள்
என்றால்
நான் அவளுக்காய்
வெளியிடத் துணியும்
சுதந்திரமே...

என்றோ ஒரு நாள்
என் எழுத்துக்கள்
இறந்து போகலாம்
என் கனவுகளும்
சிதைந்து போகலாம்

காரணம் உனக்காய் 
வெளியிட்ட 
சுதந்திரக்காற்றை
நீ ஏற்காததுதான்
காரணமாயிருக்க முடியும்.

பலகாரணங்களை 
நான் முன்வைப்பேன்
என் காதல் பின்தங்கிச்
செல்வதற்கு.

ஒன்று உன் உடைமைகள்
வெளியிடும் குளிர் காற்றில்
என்னை மெல்லப் 
பனிக்கச் செய்
இல்லை..

என் கனவுகள் உறங்கும்
உன் இதயத்துக்குக் கூறு
என்னை வெறுப்பதற்கான
காரணங்களை..















கவிதை 3

கவிதை 2

கவிதை 1


மனது...........










கடவுள் விழுமியங்கள்
சிலவற்றையே 
பேணுகிறது..