Tuesday 23 December 2014

மென்சலனம்




உன் மென்சலனம் முகமூடி அணிவிக்கிறதுறது
என் துறவறத்தின் மீது
உருக்குலைந்த உயிர்க்கனவை
நீ என் உதிரத்திலே தோய்க்கிறாய்....

நடைப்பிணமாய் என் அனாதையிரவுகளை
சுற்றிச் சுற்றி சுழன்றவனாகிறேன்...
நீ மறந்தாய் என்று உணரும் தேவைகளுக்காய்...

உயிரிலொன்று உடைவதுபோல்
எனக்குள் உருக்குலைக்கிறது
உனது நிழல்...


சிறு குழந்தையின் சுவடுகளாய்
உன் ஓசைகளின் நிழல் அங்கங்கே
என் தனிமைப்பொழுதைக் காத்திரமாக்குகிறது

நீ வெளிர் நதியே ஆனபோதிலும்
என் பசுமைமீது எப்படி ஓட அனுமதித்தேனோ
இதோ இப்போது இந்த வரண்ட தேசம்
அதை அனுமதிக்காதா,.............

Wednesday 8 October 2014






அந்த இருளுக்குள் பேசத்தெரியாத பல மௌனங்கள்
அடைபட்டுக்கிடக்கிறது..

இருளினிடத்து
இரயில் பயணங்களாய் அவள் பார்வைகள்
எதிரே நகர்ந்து செல்கிறது ...
பார்க்க முடியாத படிக்கு...


செல்லிடத்தோணிகள் கூட
மூழ்கிக் கொண்டிருக்கிறது
அந்த அலைகளுக்கான காரணங்களுக்காக..

நான் செய்திகளை கூட அலைகளின் மூலமே அனுப்புகிறேன்
அதுதான் இலகுவில் மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறேன்..

ஏனெனில் என் தொடர்புகள் யாவும் அவளுக்கு அலைகளின்
மூலமான் அழகிய மூங்கில் குழலிசையே..

அதுதான் அவள இன்னமும் உணரமுடியாமலும்
மொழிபெயர்க்கமுடியாமலும் ....

Friday 30 May 2014





உன்னை நட்சத்திர துகள்கொண்டு
யாத்திருக்க வேண்டும் இறைவன்
அல்லது உன்னை நேசிக்கும்
என் மனம் எப்படிப் பிரகாசிக்கிறது
இவ்வளவு ஒளியுடன்....
.............................................................
தொலைவில் கேட்கும் பாடல்
கடந்தும் மறக்கப்படாத
உன் காதலியின் இரசநிழல்........


.............................................................


விடைகள்
தன்னைக் கூறமுடியாத
வினாக்களை நம் ஒவ்வொருவருக்காகவும்
சொல்லிக்கொடுக்கிறது
நம் வாழ்வுப் பாதையில்.......


.................................................
என் வயதுச் செடியில்
பூக்கிறது
பறந்து திரியும்
அவள் மனத்தேனிக்கள்...





Thursday 20 March 2014

கல் வாழ்




உன் மனம் கல் வாழ்
போன காலங்களெல்லாம்
வெறும் வாழாய் எனைக்
கீறிக் கிழித்துக்கொண்டிருந்ததில்
மகிழ்ந்திருந்தேன்........ இன்று


என் உண்மைச் 
சாயல் காலகதியில்
மூழ்கடிக்கப்பட்டுவிடும்.........

அது போகும் பாதை 
எல்லோரையும் அலக்கழிக்கிறது

வீணான விவாதங்கள்
சிரிக்கிறது ...  என் மனித நேயத்தைப்
பார்த்து தம்மை  அடைக்கலப்படுத்திவிட்டேனென்று.

என்னையும் சேர்த்து 
அந்த விவாதங்கள்  கொண்டுசென்று ..
மோகம் தனைத்துறந்ததாய்
சொல்லும் கானலுக்குள் அடைத்துவிடும்...

இவ்வளவும் கற்பப் பைக்குள் 
திணித்திருக்கிறார்கள் 

என்னை இறுதியில் பாவங்களுடன்
அனுப்புவிடும் இந்த மனித குலம்...

Tuesday 18 March 2014

தூலப்பொருள்



தூலப்பொருளாயும் தொலைத்த
பொருளாயும் ......
காலப் பெருவெளியாகவும்
கனிந்து எனைமேவும் இரவாகவும்
........................
தீக்கிடை சேரும் மனதை
நீ பூக்கடையாக்கினாய்......
நீ விழிகளற்ற தரிசனம் போலே
தினம் சேரும் வளிதெரியாமல்
தவிக்கிறேன்....

போ நீ..எல்லைகளற்று ஏதோ ஓர் முடிவில்
என்னுணர்வு உன்னைத் தீண்டும் தன்மையாகி
உன்னைத் தேடி வரும்

........................................
நிகழ் காலப்புன்னகையை
உண்மையென்று நம்பிக்கிடக்கும்
இதயத்திற்கு எப்படி விபரிப்பேன்
காலமே இல்லாமையிலிருந்து
தோன்றுகிறதென்று......



Thursday 13 March 2014


நீ கால கதியில்
விட்டுப் பிரிவேனென்கிறாய்
என் மனம் கடுகதியில்
வருமென்பதை மறந்து...


Thursday 6 March 2014

விலகுவதாகும் மனதில்


விலகுதாகும் மனதில்
தொலைவினிலாடும் முகம் நோக்கி
என் இதயம் கிறங்கி சுற்றுகிறேன்....

தொலைவதாகும் என் எண்ணங்களை விட
நெருங்குவதாகிறது மோதலைப் பாதுகாக்கும்
உன' ஒரு சொல்.......................

நானும் பிணமாகித் தொலைகிறேன்
உன' வியாக்கியானங்களால்....

நீ இனி என்னுள் வந்து  பாடு
மொழிகளற்ற புதுமையான இசையுடன்......


Wednesday 5 March 2014

நிலைகாணாமல் தவிக்கிறது


ஒவ்வோர் முறையும் தடைகள் தாண்டி துடிக்கிறது ஏதோ ஒன்று தேடி 

நிலைகாணாமல் தவிக்கிறது

உள்ளே ஆழமாய்ச் சென்றாலும் மனக்

கோது மட்டும் நின்று ஊசலாடுகிறது

மனங்காணும் இந்த வாழ்க்கையின்

சிறு தேடல் பொய்யா

என ஊகம் கொள்ளும்

மனமும் பொய்யாகிப் புண்ணாகிறது....



இனியும் இரவுகள் ஏறி காலம் கழியுமோ

இந்தப் புளுக்களுககு

வடுக்களுக்கு மட்டுமே

தெரியும் இந்தப் புனித உலகின் விழிப்புப் பற்றி

மோதுகின்ற கண்களில் தேடல்கள் தொலைந்து கிடக்கிறது

வாடுகின்ற மனங்களையே கண்களும் காண்பிக்கிறது

எல்லாப் புனிதங்களும் கரையொதுங்கிக் கொள்கிறது

பயனில்லாச் சருகுகளை தேடிக்களைத்துப்போனேன்

என எண்ணிக் தொனித்த குரலில் பாடுகிறது தான்

விரும்பிய பாடலை மனது....................




எத்தனை முறை உலகத்துக்காய் நான் தலை சாய்த்திருக்கிறேன்

என் இலட்சியம் மறந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்

அது வெறும் சாரல்கள் போல் எனக்குள் வந்து இடையிடையே

தன் மகிழ்ச்சிகளை என் மீது பொழிவதில் எனக்கு

உடன்பாடல்லை.....


இங்கே வற்றாத குளிர் மேகத்தில் அடைந்து கிடக்கிறேன்

கொஞ்சக்காலம் மனித முகங்களை பார்க்காது....













Sunday 2 March 2014

என்னைப்போல் உனக்கும்.........


அப்போது உலகமும் 
இந்த உயிர்களும் புதியதுதான்
தவன்று எழும்பி நடக்க தொடங்கிய போது
அவரை வரவழைத்து அதிசயமான
கதைகள் சொல்ல வைத்தார்கள்
நிலாவைப்பற்றி அதிகமாக
பேசினார்.....

                                                           
அவர்........
வீட்டிலே சில காலம் முடங்கிக்கிடந்தார்
நான் பாடசாலைக்கு செனறு கொண்டிருக்கிறேன்
.இப்போது
என்னை அவருடன் பேச அனுமதிப்பதில்லை



பின் ஒரு கால இடை வெளியில் கல்லுரி முடிந்து
வருகிறேன் ..
மாட்டுத் தொழுவத்தருகில் ஒரு கூடாரம்
அவர்... அங்கே முடங்கிக் கிடந்தார்
என்னைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை.....


.....பல காலம் உருண்டொடுகிறது எனக்கும் திருமணமாகியது
எனது குழந்தையும் நடக்கப்
பழகிக் கொள்கிறான் ....
இப்போது
எனது தந்தை நிலாவைப்
பற்றிய கதைகள் மடியில் உட்கார வைத்து
சொல்லிக் கொண்டிருக்கிறார்......

Friday 28 February 2014

என் நெடித்துப்போன பாதையின்
கீறல்களைவிட
முகாரியான என் எண்ணம்
கிழிக்கின்ற கவிதைகளைவிட

Thursday 27 February 2014

இரகசியம்




இது நீந்த முடியாத கரையென்றால்

நாம் இதற்குள் இறங்கியிருக்கமாட்டோம்

நம்பிக்கை யாருக்கோ 

இருந்திருக்கும் நாம் கரைகாண்போமென்று.

இப்போது புரிகிறதா கரைகளற்ற 

ஒன்றில் நாம் நீந்துவதும் மிதப்பதும்

அமிழ்வதுமாய் பயணிக்கிறோம்

யாரிடமும் சொல்ல முடியாது 

இவர்கள் 

இதை குளம் எனவும் சிறு கிணறு போலவும் நினைத்திருக்கலாம்

யாரிடமும் சொல்லாதே 

உன் முடிவில்லா 

இந்தப் பயணிப்பு நீ 

முடிந்துபோனாலும் கரைதெரியாமலே 

இறக்க நேரிடுமென்று

Friday 31 January 2014


ஒரே தட்டில் உணவு
உட்கொண்டு எழுந்திருக்கிறாள்...
கைகளின் பிசையல் தன்மையுடன்
இருந்துகொண்டிருக்கிறேன்..நான் மட்டும்..
இப்படியே என் நாற்காலியும் நடுவிலிருந்து
சொட்டும் அவள் தட்டும் உரசிச் செல்லுகிறது..
தொடர்கிறது இனி அவளுக்குமெனக்கும்
இனம் புரியாத ஊடல்
நான் ..........
இனி அங்கு செல்வதிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறேன்
இன்று அதே இடத்தில்

இன்னோர் ஊடல் கனதியாய் மோதுகிறதை காண்கிறேன்...
இவ்வாறே என்னிலிருந்தல்ல
யாரோ ஒருவரிலிருந்து கண்டுகொள்ளப்பட்டல்ல
தானாய் உருவாகித் திளைக்கிறது..
உலக முடிவுவரை.......
இது தொடர்ந்து கொண்டே இருக்கும்..




என்னையும் உலகையும்



மேகமிற்ற உலகிலே என்
தாவும் தன்மையின் தேடலை என்செய்ய
புதிய தேடலாய் மாற முன்னம்
மீண'டும் பழைய கால
இதிகாசம் மனனம் செய்ய கட்டாயப்
படுத்துகிறது........

தேடுவதன் தன்மையற்று இன்னும் எவ்வளவு
காலம் தொலைந்து கொண்டிருப்பேன்
இருளுக்குள் முளைக்கும்
என் சிறகுகள் யாருக்கும் தெரியவில்லை
எனது வானத்தையும் யாரும் காணவில்லை..

போதுமென்று ஒதுக்கியதைவிட தேவையற்றது
அல்லது முடியாது என்று ஒதுக்குவது
கனத்த சிகரங்களாய் ஏறி நிற்கிறது..

ஒற்றைககாலில் புரியாத தேடலுக்காய் சிவனைப்போல்
யாசகம் செய்கிறேன்
என்னைவிட்டு மனம் மட்டும் புத்தனைப் போல்
தொலைந்து மௌனமாகிறது மனது....

Tuesday 28 January 2014

நீ யார் என்ககேட்டு


நீ யார் என்ககேட்டு அழ
பக்கத்தில் உன்
இறப்புக்கான காரணத்தை
வைத்துவிட்டு அப்போது
பிரியும் உன் உயிரற்ற உடலுக்குக் கூட

நீ சொந்தமற்றவனென்று..



கண்ணாடித் தெருக்களில்தான் எம்பயணம்
சற்று சறுகினாலோ அலங்கோலமாகலாம்
அல்லது நீ உடைந்து போகலாம்..
ஏனெனில் நமக்குப் புரிவதில்லை
சுற்றிவர கண்ணாடியாலான உலகம்
ஆக்கப்பட்டிருக்கிறது
கடினமாகப் பார்க்காதே
மென்மையாகப் பார்...

பார்த்தலின் தன்மையிலும் உன் உலகம் உடைந்து

நீ எண்ணங்களால் புதிதாய் ஒன்று
உருவாக்கி வாழ்ந்து கொண்டிருப்பாய்
நிச்சயம் உன்னை அது கரை சேர்க்க
கடினப்படும் ...
ஏனெனில் விதிக்கப்படுவது
கடினாமாய் இருக்கும் விரும்பிக்கிடைப்பதே
இலகு..

எவ்வளலுவு காலம்
உன்மனப்பாயில் எவ்வளவுகாலம்
உருண்டு புரண்டு செல்கின்றனர் யாரையுமே
கண்டு கொள்வதில்லை
காரணம் ஒன்றுமே இல்லை விதிக்கப்பட்டதல்ல
அது பழக்கப்பட்டது அதுதான்
இன்னும் கடினமாய் இருக்கிறது

என் மனவிம்பங்கள்



மனது எங்கே போகிறது எனக் கேட்கின்றனர்
.
நினைவுகள் யாவும் 
செயல்களேதும் இல்லாமல்
மனமாக தொனிக்கிறது

..Where mind is going to ask me
. Memories are not practicing
The heart sounds


எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி
நீ போனால் உன் நன்மைக்கான
புரிதலும் உன்னைவிட்டு விலகிவிடும்........

Away from all evils
If you are for your benefit
Understanding and whittle away ........


எல்லா பொழுதுகளையும்
குற்றமில்லாத பொழுதாய் மாற்றினால்
ஒரு பொழுதுகூட மகிழ்ச்சியாய் இராது .

All during the
If you change fault polutay
will not change a happy period of...


உன்னை நிறுத்தும் ஒரு நொடி மாறினால் அது
மகிழ்ச்சி அடையும் தன்மை ஆகிறது
அது உலகத்தில் காதலாய்த் தானிருக்கும்
அதற்கு அவ்வளவு சக்தி உண்டு.


If yourself stop for a moment then it changes
Of happiness is reaching
It's love in the world
It has so much energy



எனக்குள்ளே என்னேரமும்
அடைபட்டுக்கிடக்கிறேன்
உன் பார்வை விடுவிப்புக்கள்
எனக்குக் கிடைக்காதா என்று

Within me all the time
Confined
Your sight the
I could Will not



எங்கே வீட்டுக்கும் தேடலில்லாமல்
மறைகிறது மனம் இதுவென்ன
என் உணர்வுக்குள் புதினம்
கலகமே கொன்று தின்று போகிறது..........
காதலெனக்கூறிவிடலாமா?...............


Where is the house without a search
What it hides inside the mind
My heart's New
Riot is going to kill and eat ..........
Love it