Monday 30 September 2013

நயமும் வஞ்சமாய்த் தீரட்டுமினி
பொருள் வரி சாறுமினிவேண்டாம்...
மொழிஒரு பொருள் வடிவுமினிவேண்டாம்...
புதுக் கவியினிக்கலையட்டும்...
தனியொரு புத்தியில் மனதடுமாறும்
கவிபுனையதுதரமாகும்..............






தனிமை ஒரு காடென்கின்றனர்...
அதற்குள்தான் இலகுவாய் தவம் செய்ய முடியும்...
உன்னை நோக்கி வீசும்
மனப் புயலைப் பற்றிக்
கேட்பாயானால்.. நான்
என்னை நோக்கி வீசும்
உன் மனப் புழுதிபற்றியும்.
கூறுவேன்.
.............................................
தோல்விகளை விரிவாய் நீ கற்றுக் கொள்ள
இறைவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்...
இடையில் வந்து தகர்த்தெறிவார் ... வெற்றியின் மூலம்......


சகியே என் உயிரில்
மெல்ல நீ நிரம்பு....

சுகிக்கட்டும் மெலிதாய் 
ஓடு என் நரம்பில்...............

என் உயிர் ஊனக்காற்று..
கரைந்து போகும்
மெல்ல நீ இதயம் உரசு......

என் உள்காற்றில்
மெல்லென நீ பேசு........

என் பிறப்பு
உறுதிகொள்ளட்டும்

உன் மிருதுவான சலனம்
நெஞ்சில் நிரப்பு......

இறந்துபோகுமளவுக்கு
வாழுமென் இதயத்தை
மேவு உன் கோபமற்ற
வார்த்தைகளால்.................

காயத்தினாலே


காயத்தினாலே 

மனதிலிருந்து விலகிச்செல்பவைகளை
மனிதர்களால் விடமுடியாதென்பதை
காதல்எப்படியோ அறிந்திருக்கிறது....
பெண்களில்/
காயத்தினாலே சுகிப்பு...
காயமற்ற சுகிப்பு........
இதில் ஏதாவதொன்றில்
ஆண்கள் உயிருடன் எரிதலே நியதி...

கலங்கினும் .......நீ விழிநீர் சிந்தினும்
தாண்டிக்கொண்டேதானிருக்கும்
அடுத்த கட்டத்தை உன்வாழ்வு..............
உன் காதல் சிகிச்சைக்கு
அனேகமாய் என்னிதயத்தின்
குருதியே.. உறிஞ்சுகிறாய்...

குறைவாய் உண்மையை விழுங்குகிறார்கள் பெண்கள்
அதனால்தான் அதிகம்
பொய்களை
வெளியிடுகிறார்கள்...ஆண்களிடம்.....


கற்பனை வெளிகளில் சில மனிதர் கவிதை
நிரப்புகின்றனர்.அதிலே மனிதரில் சிலர்...
கவலை நிரப்புகின்றனர்.......