Saturday, 30 November 2013

காதலாகிய தருணங்கள்தான்..


இது உண்மைச் சம்பவம் காதலாகிய தருணங்கள்தான்..... யாருக்கோ நடந்த சம்பவம்... இது... எனக்கு நடந்தாய் பாவனை செய்து எழுதுகிறேன்....

என் எண்ணங்கள்

என் எண்ணங்கள் 
நரைத்து உன்மீது படுகிறது.
நீர்த்துளியில்எரியும்உன்காதல்மட்டும்அதை அறிந்துவிடாமலிருக்கிறது....

என் வயது முதிர்து போன இளமைக்குள்....
உன் தீரா எரி பொருளைக் கொஞ்சமேனும் நிரப்பு ...
அது தீர்ந்து 
போனதற்கு நான் காரணமில்லை
அதற்கு உன் எண்ணங்களின்
வற்றுதல் தான் காரணமாய் இருக்கும்

Tuesday, 26 November 2013


எனது ஓவியங்களலில் சில...
இந்த ஓவியம். -26 -11-2013அன்று வரையப்பட்டது. 


என்னில் மிதந்து










என் கண்ணாடி விழிகள் கூட


மறுத்தது வலிகள் கடப்பதாய்


எண்ணும் எண்ணங்களை இல்லை...அது


பரவியே முதல் விழி திறந்தது






உனக்குள் திறந்ததை அது இசைதான்


முழுமையும் தேடு


வாசல் கதவுகளற்றும் சில


துவாரங்களினாலும் உள்செலுத்து


உடைந்துவிடாது.........உனக்குள் திறக்கப்பட்டதா


இல்லை உடல் நனைத்த இரவுகளால் உருவானதோ


இல்லை அது இருந்தது....




இரு இமை திறக்கிறது உள்ளே விழிகள் அற்று


பார் ... முகாந்திரமான விரிசலான இசையுடன்


வெளிவருகிறது...



அது. .. பேரிரைச்சலுடன் உன்னை மோதி இறக்கிறதா


உயிர் கருக் கலைந்து வாழ்வில் மோதுகிறதா


அழிக்கிறதா மிச்சமிடாமல் இனிய தருணங்களை


மிகவும் அன்போடு திறக்கப்பட்டது


கனவு மெய்க்காவலில் இருந்து தப்பிக்க


ஏதாவது உற்பத்தி இசையை கடன் கேட்கிறதா..




அதுதான் நீ மயக்கம் தெளிந்த


பொழுதுதான் ஞாபகம் அதற்கில்லை


அதுதானே ஞாபகததில் வைத்துக் கொள்ளட்டும்..