Saturday 16 November 2013

வாழ்வின் சிந்தனை சுருக்கம்பற்றி


நாறாய்ச் சேறு பிழிவது 
அது ஒரு இறவாப் பிண்டம்
கனதியானதும் மெதுவாய்ப் படித்தாலும்
கண்களைத் தின்றும் 
சிலவேளை நசித்தும்
காரணங்களற்ற 
பார்வைகள் கொடுத்தும் ஆனால்
கருத்துக்கள் ஆழமானவையாகவும்
நிறுத்து!!! 
ஒருவனின் கேழ்வி இது.. 
சிந்திவிடாதிருக்கும் நனைந்து தொங்கும் ஒரு
ஈரமற்ற துணி போலா?
அது காயமற்று உயிரற்றிருக்கும் உடலா?
பதிலளிக்கிறான்.
இல்லை !!!!
வெறுமையுடன் செழிப்பாயிருக்கும்
இந்த வாழ்வுதான் அது.......

நினைக்காதல்

இருளின் ஸ்பரிஸத்தை
ஏற்றுக்கொண்டு விண்மீன்கள்
துளிகளில் முகர்ந்து கொண்டு வீணையின் இசையுடன்
தோனிப்பாட்டுக்கிழியும் தொகுதிகளாய்
பறந்தபடி பாடிச்செல்கிறது.
ஓர் பறவை....

அவள் பார்வை..
எனக்குள் நிழலாடுவதைப்
பார்த்த காரணங்களினாலே..

நானும் நிழலில்லா இறப்பும்

நானும் நிழலில்லா இறப்பும்
**********************
எத்தனைபேரோ என் இறப்பின்
இரசனை தொட்டு உணர்வது
எத்தனை அடுக்காய் உடல் பிளக்கப்பட்டது பார்
அவர்கள் மனமெல்லாம் தெரு நாய்களின்
கழிவறை போலெ ....

Friday 15 November 2013

மூங்கிலின் வாசலிலே


என் கண்ணாடி விழிகள் கூட
மறுத்தது வலிகள் கடப்பதாய்
எண்ணும் எண்ணங்களை இல்லை...அது
பரவியே முதல் விழி திறந்தது

Thursday 14 November 2013

கற்பனை ஓவியம்


கொழுந்துவிட்டெரியும்
அந்த நிலவுக்கும் தெரிகிறது ஒரு பயணியற்ற
விண்கலம் நானென்பது
அல்லது வீண்கலமென்று

ஈழத்தவன்......


புத்தனுக்கும்
சில தமிழருக்கும் தெரியாத 
தலைகள் இவை...



அலைகளிலே கணவன் 
மீன்களெங்கே தேடுகிறான்
மறுநாள்!!
கரைகளில் அவன் 
உடலெங்கே தேடுகிறாள்..ஒருத்தி


வெற்றுப் பாத்திரம்தான்




நின்றால் மட்டுமே
ஓடிக்கொண்டிருப்பதை
அறிவாய்.......................


நீ வெற்றுப் பாத்திரம்தான்

அதை இன்னொருவர் நிரப்ப
அனுமதியாதே.................

உன்னிலே தொடங்கு

 

மனதிலிருந்து விலகிச்செல்பவைகளை
மனிதர்களால் விடமுடியாதென்பதை
காதல்எப்படியோ அறிந்திருக்கிறது....
பெண்களில்/
காயத்தினாலே சுகிப்பு...
காயமற்ற சுகிப்பு........
இதில் ஏதாவதொன்றில்
ஆண்கள் உயிருடன் எரிதலே நியதி...

ஓஷோ படித்த கடவுள்

ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவஞானி சொன்னதைக் கீழே சில குறிப்பிடுகின்றேன் அதிலிருந்து புரியும் ஒரு துளியின் தன்மையே புகட்டிவிடும் ...ஒரு சமுத்திரத்தைப்பற்றி..

கவிஞனின் காதலி

உன் சிரிப்பொலிகளாலெ
நம் உயிரிரண்டும் புணர்கிறதே..எனக்குள்