Thursday 14 November 2013

ஓஷோ படித்த கடவுள்

ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவஞானி சொன்னதைக் கீழே சில குறிப்பிடுகின்றேன் அதிலிருந்து புரியும் ஒரு துளியின் தன்மையே புகட்டிவிடும் ...ஒரு சமுத்திரத்தைப்பற்றி..

"தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்' என்பதில் தொடங்கி, "உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று, மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருங்கள்; எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உணர்ச்சியைக் கொடுக்கிறதோ... அவையெல்லாம் உங்கள் முன்னேற்றத்தின் தடைகள். எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உணர்ச்சியைக் கொடுக்கவில்லையோ, அவையெல்லாம் உங்களை முன்னேற்றிச் செல்லும் பாதைகள்; இந்தக் கணத்தை நாம் மகிழ்ச்சியுடையதாக மாற்றிக் கொண்டால், அடுத்து வரும் கணத்தையும் நாம் சந்தோஷமாக ஆக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகம் நமக்குக் கிடைக்கும்; அன்பு ஒன்றுதான் தெய்வீகத்தை நோக்கி எடுக்குவைக்கும் முதல் அடி. சரணாகதிதான் கடைசி அடி. இரண்டு அடிகள்தான் நம் வாழ்க்கையின் முழுப் பயணமும்; ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதைப் போல எண்ணி வாழுங்கள். யாருக்குத் தெரியும், இதுவே வாழ்வின் கடைசி கணமாகவும் இருக்கலாம்' -ஓஷோ-

ஓஷோ 1931 டிசம்பர் 11 ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார்.
ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21ல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.


1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்....

வி .... க்கிபீடியாவுக்கு இவ்வளவுதான் தெரியும் அவரைப்பற்றி..அவர் படைத்த கடவுளல்ல படித்த கடவுள் (என்னுடைய தனிப்பட்ட கருத்து) எப்படிக் கூறினாலும் ஏதோ ஒன்று குறைவு படும் எறும்புகளின் தனித்தீவுக்குள் வாழும் புது மனித மனமாய் மாறிக்கொண்டிருக்கிறது இழைஞனின் இன்றைய கால மனம் அதிலேதும் தவறில்லை அதற்குக் காரணம் என்ன என்று ஒரே வார்த்தையில் கூறமுடியாது அடிக்கடி மனந்தாண்டி காசு சேர்த்துப் பிணமாய்ப் போகிறோம் அவ்வளவுதான் மறுக்கமுடியாது அதி உன்னத வழிதேடி சென்றால் அங்கே ஒன்றுமற்று மனம் திரும்பும் நிலைதான் அப்போது என்னதான் அதற்குள் யாரிடமும் கூறமுடியாத நிலை பெருமை சேர்க்காத நிலை அது என்ன நிலை அது அப்படித்தான் அதில் ஒன்றுமே இல்லை அதில் இருக்கிறது என்று மூழ்கினால் இல்லாமலே மனம் திரும்பும்.மனம் மயங்கும் நிலையினில்தான் இந்தப் பேதம் இன்னோர்பக்கம் நன்றாத்தானே கடக்கிறது  நிலையாய் மாற்றுவதில்தான் சிக்கல் அதை ஒருசெயலாச் செய்வதுதான் பிழை

எத்தனை காலம் எத்தனை மகான்கள் ஞானிகள் கலைஞர்கள் சொல்லிச்  சென்றார்கள் பிறப்பையும் இறப்பையும் இவர் சொல்தில் ஒரு ஆத்ம திருப்தி இது தனித்தனியா நான் சொன்னா தட்டிக்களிப்பார்கள் அதுதான் இப்படி ஆர்பாட்டம் 

உன் உள்மனம் சொல்லும் உண்மைகளைத்தான் புத்தரும் சொன்னார் இன்றையஞானிகள் சிலரும் பேஸ்ற் பண்ணுகிறார்கள் அது ஒரு .......... மேலும் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்........





No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.