Thursday 14 November 2013

கற்பனை ஓவியம்


கொழுந்துவிட்டெரியும்
அந்த நிலவுக்கும் தெரிகிறது ஒரு பயணியற்ற
விண்கலம் நானென்பது
அல்லது வீண்கலமென்று



தொந்தரவு செய்வதில்லை கனத்த மழையாய்
நான் நிலம் வாழும் உயிர்களை
எப்படியோ இன்றோ நாளையோ பிளந்துவிடுவேன்
இவர்கள் கூறும் அந்தஉடைக்க முடியாத வானத்தின்

பிம்பங்களை ஓ.... அது நடுத்தீவினில் ஆடும் ஒரு
கடுதாசியின் ஓவியமா...?


தொல்லைப்டுத்துகிறதே அப்போது
எதற்கு இந்த வீண்தாகமெல்லாம்.
இப்போது கிழித்தெறிகிறேன் அந்த ஓவியத்தை
ஆனாலும் ஒவ்வொரு எழிலும் எனக்குள் ஒன்றை விதைக்கிறதே
அந்த நிலவு போல் இப்போது வானத்தில்
இருக்கும் சிறுதுண்டு...

மீட்சிபெற வைக்கிறதோ இல்லை மீளத் திணிக்கிறதோ
ஒன்று ....இல்லை இரண்டு வட்டமிட்டபடி 
இருக்கிறது இரு முழு நிலவு

1 comment:

  1. manadhi porattangalai sittharikum vidhamaai um kavithai.. idhu en manadhin purithalin.. thuligal .. ullul irukum unmai thanamaiyai unaradhu manam sila ennangalai virithukondu.. erigindrapozhudhu veen ena unarndhum.. aasaigalin pidiyilum.. soozhalin suzharchiyilum.. thannai kizhithukondu.. thollai serkindradhu.. irupinum andha thollaiyin uoodae siridhu magilvaiyum ninaitthu magilgindradhu.. uyirrootugindradho??/ illai uyir pokkugindradho???? edhuvae endralum.. nirandharamilla poratathilum siru nilaiyilla sandhosam anubavikkum manadhu.. irupinum irava aasaingalin pidiyil endrum erigindra manam... sariya kaviyae.??? by Rups Robin

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.