Thursday 14 November 2013

கவிஞனின் காதலி

உன் சிரிப்பொலிகளாலெ
நம் உயிரிரண்டும் புணர்கிறதே..எனக்குள்

உன்னைத்தாண்டிச் செல்லவில்லை
காற்றுக்கூட மூச்சுக்காற்று உணர்கிறது

நீ இறங்கிப் பேசுகிறாய் என் இதயத்தில்
நான் எழுத மறந்த பாடல் வரிகள்தானவை

காதல்ஒனறும் பெரிதல்ல அவள் கண்ணில்
உன் கண்கள் உரசாத வரையில்

புத்தன், காந்தி ,யேசு வந்த தடங்களில்
தேடுகிறேன் காதலை நகர்த்தும் சான்றுகள்
உன்டா என்று..

கவிஞனுக்குள்ளே என்ன புதிர்கவிதை
அதைத்தான் விடை தேடி எழுதுகிறான்
புதுக்கவிதையாய்....

நீ தாண்டாதே எதையும் தாண்டுவதென்றால்
அதற்கு விழுவதுதான் அர்த்தம்...

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.