Thursday, 14 November 2013

வெற்றுப் பாத்திரம்தான்




நின்றால் மட்டுமே
ஓடிக்கொண்டிருப்பதை
அறிவாய்.......................


நீ வெற்றுப் பாத்திரம்தான்

அதை இன்னொருவர் நிரப்ப
அனுமதியாதே.................


பற்ற வைத்துத் திரியைக்

களவாடும் இடையில்
வந்த காதல்.......................

பயமற்று இரு அதற்கு

உன்னை அணைப்பதைக்
காட்டிலும் வேறு
செயல் தெரியாது.....

உன் இயலா நிலையைப்

பேசினால் பேசட்டும்
அவர்கள்......................

நீந்த முடியாமல் இறுதியில்

உன்னிடம்தான் வருவார்கள்
உன்னோடுசேர்ந்து
மிதப்பதற்காய்.......................

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.