Saturday 16 November 2013

நானும் நிழலில்லா இறப்பும்

நானும் நிழலில்லா இறப்பும்
**********************
எத்தனைபேரோ என் இறப்பின்
இரசனை தொட்டு உணர்வது
எத்தனை அடுக்காய் உடல் பிளக்கப்பட்டது பார்
அவர்கள் மனமெல்லாம் தெரு நாய்களின்
கழிவறை போலெ ....


என் வண்ணம் கிழித்தெறியப்பட்டது
கடவுளுக்கும் தெரியாமல் அவர் !!!
சொல்ல முடியாது.. எனக்கு முன்னமே
அவனைக் கடந்திருக்க வாய்ப்பிருக்கிறது
தமிழின் மனவலிமை குறைந்த காலமா
நலிந்ததா இல்லை.. விடைதெரியாமலே
இறந்து போன உயிர்களின் தோல்வியா?

இப்போது...
பாடல் வரிகளாய் என்மீது உடைவுறுவது எல்லாம்
எம்தாய் நிலம் பற்றி
உங்கள் கனவுகளின் நீண்ட வலிதோய்ந்த எண்ணங்கள்தான்
வலிக்குள் அடிக்கடி தோல்வி
மேலும் தோற்றுப்போய்
இன்னுமின்னும் அழுகுரலுடன்

சிதைத்து வீசப்பட்டது
ஒரு கல்லொன்று ...
முட்டிமோதி உலக விரோதிபோல்...
பிய்ந்து கிடக்கிறது..
உங்களில் ஒருவருக்கு என் வலிகளின் சாயம் ஊற்றப்பட்டாலன்றி உணர முடியாது...
என் ஊருக்குள் என்னை நினைத்து ஒரு
செடி முளைக்கும்... அதைச்சுற்றிலும்
கல் அணைகள் கட்டுங்கள் அந்த நாய்கள்
முகராத வண்ணம்.................
தொடர்ந்த காலடிகள் அங்கே நினைவுகளாய்ப் பார்ப்பதற்கு.......
எனக்கும் மண்ணுக்கும் உள்ளவேதனை
நீ உணரமுடியாத காதலாய்க்கூட இருக்கலாம்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.