Thursday 31 October 2013

புல்வெளியில் ஓர் மரணிப்பு.............





................புல்வெளியில் ஓர் மரணிப்பு.............


நரம்கொன்று உயிரெல்லாம்
சருகாக்கிறாய் உடல்தனை
உன் உறுப்புக்களாய் போர்த்துகிறாய்
சூரியன் காட்டி என் பொழுதெல்லாம்
உயிர்போகும் தவிப்புணாத்துகிறாய்.


விழிக்கக் கற்றுத் தோற்றுப் போன
இரவுகளை நீ மனனம் செய்யச்
சொல்லி மண்ணால் என்னை மேவி
உன்னால் என்னை மறைக்கிறாய்
பார்க்கும் சுவடுகளிடமெல்லாம்
மிதிபடுகிறேன் நான் இன்னொருமுறை .


ஊடுருவிச் செல்கிறேன் நான் இயேசுவின்
தோல் போர்த்தப்பட்ட சிலுவைகளை நீ
உக்கிப் போர்த்தியிருக்கிறாய்.உன்மேலே
இடையிடையே ஞானிகளின் ஆடைகளும்
நெய்யப்படாத குப்பைகளாக்கி
உக்கவைத்திருக்கிறாய்................


சில உயிரணுக்களுடன் வந்து இன்னும்
ஆழமாய்ப் பயணிப்பது இங்குதான்
முதல்தடவை ..புவிப் பிளவுகளில்
உனது உடல் தேவையற்றதாகிறது
உனது இறப்பும் அங்கே ஒரு புள்ளியாகியது......


சேர்ந்த அனுபவங்களுன் உயிர்ப்போருள்
புல்வெளியில் மரணிப்பதை இறைவனிடம்
சொல்லிச் சிரிக்கிறேன் முதலில் அடம்
பிடித்தனான் ...இப்போது...............!!!!!

ஆசைகள் நோக்கி ஓலமிடும் உணுர்வையும்
செவிமடுப்பது இல்லை பொறாமைக் காறர்கள்
கண்களில் எரிவதுமில்லை விழுவதுமில்லை
விழுந்தால் தாங்கிப் பிடிப்பதுபோல் நடித்து
கீழே உதைப்பவர்களுமில்லை...


ஏதோ ஒன்றை விழுங்கியது போன்ற உணர்வுடன்
புல்வெளியில் மரணித்த நான் தாகமாயிருக்கிறேன்
..........................................................................................

உலகம் மறந்த கனவு





 உலகம் மறந்த கனவு 

         ♥♥

உலகம் மறந்து போனகனவாகிறது என் கவிதைகள்தனக்கு பேசத்தெரியாதென்றுஊமை தெளிவாய்ப் பேசுகிறதுஎன்றுதான் கூறினேன்இதைப் பிழை எனகின்றனர்..நீ நம்ப மறுக்கும் உலகத்துள்தான் உண்மைதினமும்நடைபோடுகிறது...என் மனக்கடலின் அருகேமூழ்கிச்செல்லும் படகுகளேஅதிகமாய்ச் செப்பனிடப்படகிறதுஅதனைக் கொண்டுதான் கடக்கிறேன்மீதிக் கவிதைக் கடலை.அதுதான்உணருவதற்கு சற்று மனம்உனக்குக் கனக்கிறது..

  .தோல் போர்த்திய சிலுவை..

ஓடி ஓடி உழைப்பவர் கடவுளின்தன்மைக்கு உடல் சோர்வைக்காணிக்கை இட்டனர் இனோர் பிறவி கடக்க பயந்து கிடந்து புரண்டனர்சிறுகச்சிறுக உனக்குள் படைக்கிறான்தன்னை மறக்காமலிருக்கவிரக மோகத்தைக் பாய்ச்சும்பலவித பொருட்களை..................கண்காணித்து மடியும் சிலந்திகள்போல தினந்தோறும் உன்கண்காணிப்பும் பலனற்றுப்போகும்அதன் தன்மைக்கு முன்னால்...தீண்டித்தீண்டி அதைத் தாண்டாதுசெல்லும் மண்தனில் புரளும் மானிடனேஉன் புளுக்களில் சிலவற்றுக்குமானிடத்தன்மையும் பொறிக்கப்படுகிறது....வெண்ணிறம் படரும் சிரசுகளோடுதோல்போர்த்திய சிலுவைகளேசுமந்து செல்கிறது இன்றும்மானிடம் தாண்டி ஓடித்திரிபவரை....      




மௌன சோகம்






என் இதயத்தில்
புரளும் நீர்ப் பாம்புகளுக்கு..