Thursday 31 October 2013

புல்வெளியில் ஓர் மரணிப்பு.............





................புல்வெளியில் ஓர் மரணிப்பு.............


நரம்கொன்று உயிரெல்லாம்
சருகாக்கிறாய் உடல்தனை
உன் உறுப்புக்களாய் போர்த்துகிறாய்
சூரியன் காட்டி என் பொழுதெல்லாம்
உயிர்போகும் தவிப்புணாத்துகிறாய்.


விழிக்கக் கற்றுத் தோற்றுப் போன
இரவுகளை நீ மனனம் செய்யச்
சொல்லி மண்ணால் என்னை மேவி
உன்னால் என்னை மறைக்கிறாய்
பார்க்கும் சுவடுகளிடமெல்லாம்
மிதிபடுகிறேன் நான் இன்னொருமுறை .


ஊடுருவிச் செல்கிறேன் நான் இயேசுவின்
தோல் போர்த்தப்பட்ட சிலுவைகளை நீ
உக்கிப் போர்த்தியிருக்கிறாய்.உன்மேலே
இடையிடையே ஞானிகளின் ஆடைகளும்
நெய்யப்படாத குப்பைகளாக்கி
உக்கவைத்திருக்கிறாய்................


சில உயிரணுக்களுடன் வந்து இன்னும்
ஆழமாய்ப் பயணிப்பது இங்குதான்
முதல்தடவை ..புவிப் பிளவுகளில்
உனது உடல் தேவையற்றதாகிறது
உனது இறப்பும் அங்கே ஒரு புள்ளியாகியது......


சேர்ந்த அனுபவங்களுன் உயிர்ப்போருள்
புல்வெளியில் மரணிப்பதை இறைவனிடம்
சொல்லிச் சிரிக்கிறேன் முதலில் அடம்
பிடித்தனான் ...இப்போது...............!!!!!

ஆசைகள் நோக்கி ஓலமிடும் உணுர்வையும்
செவிமடுப்பது இல்லை பொறாமைக் காறர்கள்
கண்களில் எரிவதுமில்லை விழுவதுமில்லை
விழுந்தால் தாங்கிப் பிடிப்பதுபோல் நடித்து
கீழே உதைப்பவர்களுமில்லை...


ஏதோ ஒன்றை விழுங்கியது போன்ற உணர்வுடன்
புல்வெளியில் மரணித்த நான் தாகமாயிருக்கிறேன்
..........................................................................................

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.