Saturday 30 November 2013

காதலாகிய தருணங்கள்தான்..


இது உண்மைச் சம்பவம் காதலாகிய தருணங்கள்தான்..... யாருக்கோ நடந்த சம்பவம்... இது... எனக்கு நடந்தாய் பாவனை செய்து எழுதுகிறேன்....


நான் அப்போது கொழும்பில் வேலை செய்த கொண்டிருந்தேன் அப்போது நான் அடிக்கடி என் சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு சென்று வருவதுண்டு.... நான் வேலைசெய்யும் இடத்திலிருந்து சுமார் அரைமணி நேரத்தில் சென்று விடலாம் அன்று என்னவோ தெரியவில்லை நேரத்துடன் ஊருக்கு செல்லும் அவாவுடன் நான் என்னுடை உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன் .... முன்னுக்கு நின்ற ஆட்டோவில் ஏற ஆயத்தமாகி அவருடன் கதைக்க முற்பட்டேன் அவர் சிங்களத்திலே பேசினார் எனக்குத்தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் பேசி எப்படியோ நான் பகையிரத நிலையம் வந்து நான் எனக்கான் டிக்கட்டை வாங்கிக் கொண்டு அப்போது சரியாக இரவு .. 8.00 தாண்டிக்கொண்டிருக்கிறது ..


எப்பொதும் போல் புகையிரதம் தீயவர்களின் நடத்தைகளையும் நல்லவர்களின் சிரிப் பொலிகளையும் தாங்கிய வண்ணம் இயங்கிக் கொண்டுருந்தது நான் வவுனியா சொல்லும் புகையிரத தரிப்பிடத்திற்கு விரைந்து சென்றேன் ஒரு நிசப்தமான பேரொலியுடன் ஒரு ஆசனத்தில்.. அமர்ந்தேன்.. அது எனக்கென்றே அமைத்த தருணங்களாய் இறைவன் என்னை எண்ண வைத்தான் .... அதற்கு அருகிலுள்ள எல்லாரையும் ஓரக் கண்கொண்டு கவனிக்கலானேன் சுற்றி சுற்றிப் பார்த்து மனிதத்தின் தேடல்களையும் சில விலங்குகளையும் வேடிக்கை பா◌ாத்தேன் மனதிற்குள் இரசித்தவாறே... எதோ சிந்தனையில் என்னை படைத்த உலகின் ஆரம்ப நோக்கங்களை எண்ணி வியந்து கொண்டிருந்தேன்.... திடிரேன என் அருகிலிருந்த ஒரு பெரியவர் சுமார் 40 வயதிருக்கும் என்னிடம் ...உணவுன்டு விட்டு தண்ணீர் கேட்டார் நானும் கொண்டுவந்த போத்தில் தண்ணியை அவருககு வளங்கினேன் பின்பு அதை இன்னுமொரு பெண் வேண்டிப் பருகினார் நான் நினைக்கிறேன் அவருடைய மகளாக இருக்குமென் மனதிற்குள் நினைத்தவாறே மறுபக்கம் திரும்பி .... நானும் ஒளுக்கமானவன் என்று வெளிப்படுத்த பின் அவள் தண்ணீரை என்னிடம் தருவதற்காய் அருகில் வந்து...நன்றியுடன் சிறு புன்னகையும் விழிக்குள் சிதறவிட்டுச் சென்றால் பின் அவள் அடிக்கடி எழுந்து நின்று முன்னாலுள்ள கட்டாந்தரையில் தன்னுடைய தொலை பேசியை எடுப்பதும் பின் பார்ப்பதுமாய் சில ஜாடைகள் காட்டினால் ஆனால் அதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்....அவளுக்கும் அந்தப் பெரியவருக்கும் தெரியாமல்.... பின் அந்தப் பெரியவர் குடும்பத்திற்கு உணவு வாங்குவதற்காய் சென்றார் ...அந்தப் பெண்ணின் பார்வைகள் என்னவோ மனதை வருடிக்கொண்டிருந்தது மீண்டும் பார்க்கத் துடித்த கணப் பொழுதுகளை ஞாபகப் படித்திக் கொண்டிருந்தது



என் மனது சரி என்ன ஆகும் பார்த்தால்தான் என்ன என்று சுற்றி ஜாடையாய் திரும்பினேன் அவள் பக்கம் அந்தப் பெண்மட்டும் இவ்வளவு வருடம் எதனை பெண்களை இந்தக் கண்கள் பார்த்திருக்கும்.... ஆனால் அவளுக்கு நிகரில்லை கண்களுள் சிறு நொடிப் பொழுது சிக்கி இறந்து கிடந்தேன் ... மீளமுடியாத தவிக்கும் சொற்ப நேரத்தில் அந்தப் பெரியவர் உணவைக் கொண்டு வந்து எல்லோரிடமும் கொடுத்து. உண்ணச் சொன்னார் நான் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன் .. இல்லை இது முரணானது நான் அந்த இடத்தில்வைத்து உணவருத்த மாட்டாள் என்றென்ணித் திரும்புவதற்குள் பார்சலைப் பிரித்த சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்... என்ன எனக்குப் புரியவில்லை நிறைய எண்ணங்கள் மனதில் ஓடியவாறே ... இடையிடையே கண்வளியை விளிகளால் தேடிக் கொண்டிருந்தேன் ம்...ம்... அதற்குப் பிறகு எந்த ஒரு சலனமும் என்னிடம் காட்டவில்லை... ஆனாலும் பிடித்துவிட்டது எனக்குள் ஒரு ஆத்ம விதை புதிதாய் முளைத்தது போல் நெடு நேரமாகிய பின் ஒரு 10.45 இற்கு எல்லாம் புகையிரதம் இருப்பிடத்திற்கு வந்தது வந்ததும் அனைவரும் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர் நானும் கொஞ்சம் அருகினில் சென்று.... அவளைத் தேடியவண்ணமாய் நின்றேன் அவர்கள் எல்லோரும் எறிய பின் மிகப் பொறுமையாய்.... நான் நின்ற கம்பாட்மென்டிலே ஏறினார்கள் நானும் வாய்ப்பை நளுவ விடாமல் மிக மெதுவாக ஏறினேன் அவள் புகையிரதப் படிக்கட்டுக்களில் கால்வைத்துக்கொண்டு எதையோ தேடுவது எனக்குப் புரிந்தது...


பின் என்னுடைய கண்களை மெதுவாய் அவள் கண்களில் பதியச் செய்தேன் பின்பு ஒரு சப்தமும் இல்லாமல் விறு வறு என்று ஏறி ஒரு ஆசனத்தில் அமர்ந்தார்கள்... நான் அவர்களுக்கு பின் புறத்தில் 5 வது சீட்டில் அவமர்ந்து கொண்டேன் புகைிரதம் புறப்பட்டது ... ஒரு 10... நிமிடம் களித்து சற்று தலை திருப்பி தேடுவதை நான் கண்டு கோண்டேன் என்ன எனக்குள் ஏதோ மாற்றம் நிகள்வதும் தடுமாறுவதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல்....சரி மனதிற்குள் விளுந்த சந்தோசம் என்னை விடுதாயில்லை... சரி என்று மனதைத் தேற்றி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னைச் சரி செய்து கொண்டு ஒரு குடும்பம் பக்கத்தில் உறங்குவதற்கு ஆசனம் தேடியது நான் எழுந்து அவருக்கு ஆசனத்தை வளங்கி பெருமிதமாய் .. நேராய் சென்று அவள் அமர்ந்த ... ஆசனத்திற்கு நேரெதிராய் அந்த வாசல் கதவோரமாய் நின்று வெளியே இயற்கையை பாத்து இரசிப்பதுபோல் இடையிடையே அவளையும் பார்த்தவாறு ... நின்று கொண்டிருந்தேன் தலைதிருப்பி பார்க்கும் போதெல்லாம் அவளை எதிர் பார்ப்பது போல் அவளுக்குப் புரிந்து என் கண்ணசைவுகளை நோட்டமிட்டபடி பின்பு இப்படியாய் 2.மணிநேரம் கடந்தது ..பின் அவள் பார்வைகள்களும் அவள்முக ஒளியும் என்னை ஈர்கிறதென்பது எப்படியோ அறிந்து கொண்டாள் பின் அவள் என் கண்களை விட்டு நகரவேயில்லை அப்பொது உலகத்தைப் பிரட்டிப் போட்டாலும் என்ன புகையிரதம் என்ன வேகம் நான் என் மனம் எவ்வளவு வேகமாய் ஆனந்திக்கிறது. அதை எனக்குள் உருவாக்கும் அவள் bடிபாவங்களுக்கு மட்டுமே தெரியும்..ஏனெனில் அவளும் அதை உணர்நதிருப்பாள்...புகையிரதம் அடிக்கடி ஒவ்வொரு துரிப்பிடத்திலும் நிற்கும் போதும் பேச முற்பட்டேன்...பின் ஒருவாறு சுதாகித்து ஏறிவிடுவேன் அதன் பின் சைகை மூலம் கதைக்க முற்பட்டேன் அவருடன் வந்த எல்லோரும் உறங்கி விட்டார்கள் .... பின் மெதுவாய் அவள் கண்ணசைத்து அவள் இடம் வவுனியா என்று கூறினாள் மகிழ்சியின் கரைக்கு நானும் சென்றேன்... பின் அவளுடன் நிறைய விடயங்களைப் பேசினேன் சைகையின் மூலம்.... பின் என்னுடைய தொலைபேசி இலக்கத்தை எப்படியோ கொடுத்துவிட்டேன் .


...பின் வவுனியாத் தரிப்பிடதத்தில் கலை 5.45 க்கு நின்றது புகையிரதம் அவளையும் கண்காணித்தபடி ... சென்றேன்... அவர்களுக்குத் தெரியாமல் என்னுடன் ஓரிரு வார்த்தைகள் பரிமாறினாள் ... தன்னுடைய பெயரிலிருந்து ஊர்....என் சொந்த விடயங்களை சொல்லிவிட்டு ஒடீ அவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.... நான் யாழ்ப்பாணம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டு அவளைப்பற்றிய சிந்தனையுில்.... திடீரென்று என் தொலைபேசி அழைப்பு.... நான் அதில் அவள் குரலைத்தான் கேட்டேன்...... பின் தொடர்ந்து பேசினாள் 2வருடங்களாயின நான் என்னுடைய தொலைபேசி தொலைத்து விட்டேன்... பின் அவளுக்கும் தொலைபேசி நம்பர் தெரியாதா.... என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன்..நானும்.. அந்த நிஸப்த அலைகளை தேடி ஒவ்வொருகணமும் உயிர் வாழ்கிறேன்

இது ஒரு நண்பனின் கதை இதை நான் எழுத வேண்டுமென்ற ஏக்கத்துடன் எழுதினேன் நான் அவருக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை .. தீர்வு ஏனெனில் நானில்லை அவளால்மட்டுமே விடுபட்ட மன இடைவெளிகளை நிரப்ப முடியும்... இதுதான் அவருக்கு நான் கூறியது.

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.