
ஒரே தட்டில் உணவு
உட்கொண்டு எழுந்திருக்கிறாள்...
கைகளின் பிசையல் தன்மையுடன்
இருந்துகொண்டிருக்கிறேன்..நான் மட்டும்..
இப்படியே என் நாற்காலியும் நடுவிலிருந்து
சொட்டும் அவள் தட்டும் உரசிச் செல்லுகிறது..
தொடர்கிறது இனி அவளுக்குமெனக்கும்
இனம் புரியாத ஊடல்
நான் ..........
இனி அங்கு செல்வதிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறேன்
இன்று அதே இடத்தில்
இன்னோர் ஊடல் கனதியாய் மோதுகிறதை காண்கிறேன்...
இவ்வாறே என்னிலிருந்தல்ல
யாரோ ஒருவரிலிருந்து கண்டுகொள்ளப்பட்டல்ல
தானாய் உருவாகித் திளைக்கிறது..
உலக முடிவுவரை.......
இது தொடர்ந்து கொண்டே இருக்கும்..
என்னையும் உலகையும்
மேகமிற்ற உலகிலே என்
தாவும் தன்மையின் தேடலை என்செய்ய
புதிய தேடலாய் மாற முன்னம்
மீண'டும் பழைய கால
இதிகாசம் மனனம் செய்ய கட்டாயப்
படுத்துகிறது........
தேடுவதன் தன்மையற்று இன்னும் எவ்வளவு
காலம் தொலைந்து கொண்டிருப்பேன்
இருளுக்குள் முளைக்கும்
என் சிறகுகள் யாருக்கும் தெரியவில்லை
எனது வானத்தையும் யாரும் காணவில்லை..
போதுமென்று ஒதுக்கியதைவிட தேவையற்றது
அல்லது முடியாது என்று ஒதுக்குவது
கனத்த சிகரங்களாய் ஏறி நிற்கிறது..
ஒற்றைககாலில் புரியாத தேடலுக்காய் சிவனைப்போல்
யாசகம் செய்கிறேன்
என்னைவிட்டு மனம் மட்டும் புத்தனைப் போல்
தொலைந்து மௌனமாகிறது மனது....
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.