Saturday, 21 September 2013

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.