Monday 18 November 2013

மழையிலும் நனையா காகிதம்

அந்த இடத்திலே கிழித்து
எறிந்த பாடல் வரிகள் போல்
அங்கேயே மீண்டும் அங்கேயே மீண்டும்
படிக்கமுடியாதபடி ....
சில வேளை உலகே கிழித்தெறிந்திருக்கலாம்......

நனொரு இலக்கியமாகவோ ,
வேற்றுமைகளோடு
கூடிய பாடல் வரியாகவோ இருந்திருக்க வேண்டும்
யாரோ எழுதியவர் தெரியாத இசையை வைத்தனரோ
படிக்கமுடியாத படி இருக்கிறதா?..

நினதுமுகமும் மோத வில்லை
அத்தியாயமும் இல்லை
படித்திருக்க வேண்டும் உனக்குப்
பிழையானதாய் தோன்றும் காரணங்கள் அப்படி என்ன இருக்கும்......


காகிதமல்ல அது ஏனெனில்

மழையிலும் நனையவில்லைசில வேளை
யாரும் கவனிக்காது சென்றிருக்க காரணமும் இருக்கிறது.

ஒரு புத்தனைப் போலா அல்லது.
அவனைப் புறந்தள்ளிப் போகும் காகிதமா நான்..
அல்லது என்னைப் புயலாக மாறி என்னை கடலிலே
தள்ளட்டும்.

அல்லது என் பாடலைப் போல் புரிய முடியாத
காகிதமா?... எது உன்னை பெற்றது..

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.