Monday, 18 November 2013

சலீமுனான்

மொழிகள் பிழைபடுகின்ற 
குழந்தைகள் போல் பாடல் பாடுகிறது
எப்பொதும் போலல்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறது..
முகார ஒலிகளைப் புறந்தள்ளும் 
பாடல்வரிகள் .....
ஊமைக்குத்தெரியும் தன்னுடன் பேசும் மொழிகளில்
தான் பிழையென்பது  இப்படி ஒன்று
உன்மேல் படர்ந்திரக்கலாம்...
அல்லது பிக்காசோவின் அல்லது லியானா டார்வின்சியின்
எண்ணங்கள்போல்... படர்ந்து கொண்டே
இன்னமும் எனக்குள் ...நீ அனார்கலி 
நான் சலீமுனான் போல் என்னையும் மாற்றி
பிழை செய் எனக்குள் 
நம் பிரிவுகள் சரியாகும்....

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.