
தோட்டாக்கள் துளைக்காத
இரும்பு இதயங்கள்.
சில பூக்களுக்கு
வழங்கப்படுகிறது
வண்ணத்துப்பூச்சிகள்
பறக்க வேண்டிய
கரங்களிலெல்லாம்
சன்னங்கள் பறக்கிறது
உபய காரர்கள் இறுதிவரை
நழுவவே இல்லை தனி ஈழ
நிலம் விட்டு .
ஓர் இரவு பற்றி எரிந்தது
அன்று அந்த
வண்ணத்துப்பூச்சிகளும்
பறக்கத்துடித்த சிலந்திகளும்
அதற்குள்.
உலகை எத்தனித்த கனவுகளும்
பகல் வெளியியின் அவர்களது
எதிர்காலமும் ஓர் இரவில்
பற்றி எரிந்தது..
அதற்குள் கற்பனைத்
தீவும் கரையின்றிப்
போனது கரைதேடி
இன்றும் அலைகிறது
ஒரு இனமே.....
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.