Sunday 20 September 2015

மொழி பெயர்ப்பு கவிதைகள்


மொழி பெயர்ப்பு கவிதைகள்


*காதலே
காதல் நம் இருவரையும் எரித்தது
தீய்ந்த இடத்தில் விழுகிறது மழைத்துளி
உன் ஈர்ப்பு விசையில் தளர்கிறேன்
உனக்காகக் காதலைக் கொல்ல மாட்டேன்
அது என்னால் முடியாது தான்
அப்படியே இருக்கட்டும்
அறுக்கப்பட்ட பயிரெச்சம்
முளைக்கிறது வயலில்
உன் முகம் கழுவும் மழைநீர்
முறுகல் மேகத்துண்டிடை
வானில் தொங்குகிறது
மெல்லிய நிலவு
அந்தப் பாதையில் போ
தப்பாது உனது பயணம்.
- ராபர்ட் பெரால்டு.

*எப்பொழுதும் முதல் முறைதான்

காதல் கதைகளைப் போல்
சொல்கிறோம் எங்கள்
யுத்தக் கதைகளை
வெகுளியாய் இருக்கின்றன
அவை முட்டைகளைப் போல்
நகரத்தைச் சுற்றிய சுவற்றில்
எப்பொழுதும் முதல் முறையாக
மீண்டும் சந்திப்போம் நினைவிகளை.
-கபேபா படெருன்.

*ஓரே காதல்
உன் மீது
மீண்டும் மீண்டும்
காதல் கொள்வதை
என்னால் நம்ப முடியவில்லை.
ஓவ்வொரு காலையும்
மறக்காமல்
உனது துப்பாக்கியை
தோட்டாக்களால் நிரப்பி
சுட்டுத் தள்ளுகிறாய்
சுக்கு நுôறாகிறது
என் மென்னுலகம்.
-கேரி கும்மிஸ்கி
.
-ஆதாரம்:- கருப்பாய் சில ஆப்ரிக்க மேகங்கள்
மொழி பெயர்ப்பு: திரு.மதியழகன் சுப்பையா.

Friday 21 August 2015

அதன் மீதான எழுத்தின் தீராப்பசி



அதன் மீதான எழுத்தின் தீராப்பசி



நீ நீள் அலைகளை என்மீது எழுதியிருக்கிறாய்
நானும் என் அகால தேடுதலின் மரணமும்
என் நெடிய குறும்படங்களின்
ஏதோ ஓர் காட்சிகளும் அங்கே அழமான
எழுத்தின் தீராப்பசியாக
மாறி இருக்கிறது


ஒரு உயிரற்ற பறவையின் செய்தியை
கொற்றித்தின்று கொண்டிருக்கும் ஒரு காதல் பறவையின்
நிமித்தம் என் எழுத்தின் உருகுதலின்
தீராப்பசி அப்போது அதீதமாகிறது

இறந்து கிடக்கும் அந்த மலைகளின்
உசசியை மிக வேகமான திசையில் அணுகும் எல்லோரும்
அடைந்து கொண்டனர் ..
அங்கே நீட்சியும் ஒரு கடந்து போதலும் என்
கண்முன்னே மிந்து செல்கிறது

அவர்கள் அந்த மலைச்சிகரங்களிலேறி
நகைக்கிறார்கள் கீழே நிற்பவர்களைப் பார்த்து
அப்போதும் என் தீராப் பசியின்
அதீதம் உயிர்க்கிறது

பின்னொருநாளில் கீழே நிற்பவர்களைக் காண்பதற்காய்
ஏளனமாய் நகைத்தவர்கள்
வருகிறார்கள் அங்கே
அவர்கள் நிழலும் உயிரும்
கரைந்து கிடக்கிறது

அவர்களைத்தேடி மீண்டும் மலை உச்சிக்கு செல்கிறார்கள்
அதன் குளிர்ந்த முகட்டிற்கு மேலே
அந்த மேகக் கூட்டங்களில்
அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது அதன்மீதான
எழுத்தின் தீராப்பசியும் என்னை
முழுமையாக அகற்றிக் கொண்டிருக்கிறது.

Tuesday 23 December 2014

மென்சலனம்




உன் மென்சலனம் முகமூடி அணிவிக்கிறதுறது
என் துறவறத்தின் மீது
உருக்குலைந்த உயிர்க்கனவை
நீ என் உதிரத்திலே தோய்க்கிறாய்....

நடைப்பிணமாய் என் அனாதையிரவுகளை
சுற்றிச் சுற்றி சுழன்றவனாகிறேன்...
நீ மறந்தாய் என்று உணரும் தேவைகளுக்காய்...

உயிரிலொன்று உடைவதுபோல்
எனக்குள் உருக்குலைக்கிறது
உனது நிழல்...


சிறு குழந்தையின் சுவடுகளாய்
உன் ஓசைகளின் நிழல் அங்கங்கே
என் தனிமைப்பொழுதைக் காத்திரமாக்குகிறது

நீ வெளிர் நதியே ஆனபோதிலும்
என் பசுமைமீது எப்படி ஓட அனுமதித்தேனோ
இதோ இப்போது இந்த வரண்ட தேசம்
அதை அனுமதிக்காதா,.............

Wednesday 8 October 2014






அந்த இருளுக்குள் பேசத்தெரியாத பல மௌனங்கள்
அடைபட்டுக்கிடக்கிறது..

இருளினிடத்து
இரயில் பயணங்களாய் அவள் பார்வைகள்
எதிரே நகர்ந்து செல்கிறது ...
பார்க்க முடியாத படிக்கு...


செல்லிடத்தோணிகள் கூட
மூழ்கிக் கொண்டிருக்கிறது
அந்த அலைகளுக்கான காரணங்களுக்காக..

நான் செய்திகளை கூட அலைகளின் மூலமே அனுப்புகிறேன்
அதுதான் இலகுவில் மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறேன்..

ஏனெனில் என் தொடர்புகள் யாவும் அவளுக்கு அலைகளின்
மூலமான் அழகிய மூங்கில் குழலிசையே..

அதுதான் அவள இன்னமும் உணரமுடியாமலும்
மொழிபெயர்க்கமுடியாமலும் ....

Friday 30 May 2014





உன்னை நட்சத்திர துகள்கொண்டு
யாத்திருக்க வேண்டும் இறைவன்
அல்லது உன்னை நேசிக்கும்
என் மனம் எப்படிப் பிரகாசிக்கிறது
இவ்வளவு ஒளியுடன்....
.............................................................
தொலைவில் கேட்கும் பாடல்
கடந்தும் மறக்கப்படாத
உன் காதலியின் இரசநிழல்........


.............................................................


விடைகள்
தன்னைக் கூறமுடியாத
வினாக்களை நம் ஒவ்வொருவருக்காகவும்
சொல்லிக்கொடுக்கிறது
நம் வாழ்வுப் பாதையில்.......


.................................................
என் வயதுச் செடியில்
பூக்கிறது
பறந்து திரியும்
அவள் மனத்தேனிக்கள்...





Thursday 20 March 2014

கல் வாழ்




உன் மனம் கல் வாழ்
போன காலங்களெல்லாம்
வெறும் வாழாய் எனைக்
கீறிக் கிழித்துக்கொண்டிருந்ததில்
மகிழ்ந்திருந்தேன்........ இன்று


என் உண்மைச் 
சாயல் காலகதியில்
மூழ்கடிக்கப்பட்டுவிடும்.........

அது போகும் பாதை 
எல்லோரையும் அலக்கழிக்கிறது

வீணான விவாதங்கள்
சிரிக்கிறது ...  என் மனித நேயத்தைப்
பார்த்து தம்மை  அடைக்கலப்படுத்திவிட்டேனென்று.

என்னையும் சேர்த்து 
அந்த விவாதங்கள்  கொண்டுசென்று ..
மோகம் தனைத்துறந்ததாய்
சொல்லும் கானலுக்குள் அடைத்துவிடும்...

இவ்வளவும் கற்பப் பைக்குள் 
திணித்திருக்கிறார்கள் 

என்னை இறுதியில் பாவங்களுடன்
அனுப்புவிடும் இந்த மனித குலம்...

Tuesday 18 March 2014

தூலப்பொருள்



தூலப்பொருளாயும் தொலைத்த
பொருளாயும் ......
காலப் பெருவெளியாகவும்
கனிந்து எனைமேவும் இரவாகவும்
........................
தீக்கிடை சேரும் மனதை
நீ பூக்கடையாக்கினாய்......
நீ விழிகளற்ற தரிசனம் போலே
தினம் சேரும் வளிதெரியாமல்
தவிக்கிறேன்....

போ நீ..எல்லைகளற்று ஏதோ ஓர் முடிவில்
என்னுணர்வு உன்னைத் தீண்டும் தன்மையாகி
உன்னைத் தேடி வரும்

........................................
நிகழ் காலப்புன்னகையை
உண்மையென்று நம்பிக்கிடக்கும்
இதயத்திற்கு எப்படி விபரிப்பேன்
காலமே இல்லாமையிலிருந்து
தோன்றுகிறதென்று......