அதன் மீதான எழுத்தின் தீராப்பசி

நீ நீள் அலைகளை என்மீது எழுதியிருக்கிறாய்
நானும் என் அகால தேடுதலின் மரணமும்
என் நெடிய குறும்படங்களின்
ஏதோ ஓர் காட்சிகளும் அங்கே அழமான
எழுத்தின் தீராப்பசியாக
மாறி இருக்கிறது
ஒரு உயிரற்ற பறவையின் செய்தியை
கொற்றித்தின்று கொண்டிருக்கும் ஒரு காதல் பறவையின்
நிமித்தம் என் எழுத்தின் உருகுதலின்
தீராப்பசி அப்போது அதீதமாகிறது
இறந்து கிடக்கும் அந்த மலைகளின்
உசசியை மிக வேகமான திசையில் அணுகும் எல்லோரும்
அடைந்து கொண்டனர் ..
அங்கே நீட்சியும் ஒரு கடந்து போதலும் என்
கண்முன்னே மிந்து செல்கிறது
அவர்கள் அந்த மலைச்சிகரங்களிலேறி
நகைக்கிறார்கள் கீழே நிற்பவர்களைப் பார்த்து
அப்போதும் என் தீராப் பசியின்
அதீதம் உயிர்க்கிறது
பின்னொருநாளில் கீழே நிற்பவர்களைக் காண்பதற்காய்
ஏளனமாய் நகைத்தவர்கள்
வருகிறார்கள் அங்கே
அவர்கள் நிழலும் உயிரும்
கரைந்து கிடக்கிறது
அவர்களைத்தேடி மீண்டும் மலை உச்சிக்கு செல்கிறார்கள்
அதன் குளிர்ந்த முகட்டிற்கு மேலே
அந்த மேகக் கூட்டங்களில்
அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்
அப்போது அதன்மீதான
எழுத்தின் தீராப்பசியும் என்னை
முழுமையாக அகற்றிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.