Tuesday, 28 January 2014

என் மனவிம்பங்கள்



மனது எங்கே போகிறது எனக் கேட்கின்றனர்
.
நினைவுகள் யாவும் 
செயல்களேதும் இல்லாமல்
மனமாக தொனிக்கிறது

..Where mind is going to ask me
. Memories are not practicing
The heart sounds


எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி
நீ போனால் உன் நன்மைக்கான
புரிதலும் உன்னைவிட்டு விலகிவிடும்........

Away from all evils
If you are for your benefit
Understanding and whittle away ........


எல்லா பொழுதுகளையும்
குற்றமில்லாத பொழுதாய் மாற்றினால்
ஒரு பொழுதுகூட மகிழ்ச்சியாய் இராது .

All during the
If you change fault polutay
will not change a happy period of...


உன்னை நிறுத்தும் ஒரு நொடி மாறினால் அது
மகிழ்ச்சி அடையும் தன்மை ஆகிறது
அது உலகத்தில் காதலாய்த் தானிருக்கும்
அதற்கு அவ்வளவு சக்தி உண்டு.


If yourself stop for a moment then it changes
Of happiness is reaching
It's love in the world
It has so much energy



எனக்குள்ளே என்னேரமும்
அடைபட்டுக்கிடக்கிறேன்
உன் பார்வை விடுவிப்புக்கள்
எனக்குக் கிடைக்காதா என்று

Within me all the time
Confined
Your sight the
I could Will not



எங்கே வீட்டுக்கும் தேடலில்லாமல்
மறைகிறது மனம் இதுவென்ன
என் உணர்வுக்குள் புதினம்
கலகமே கொன்று தின்று போகிறது..........
காதலெனக்கூறிவிடலாமா?...............


Where is the house without a search
What it hides inside the mind
My heart's New
Riot is going to kill and eat ..........
Love it

Saturday, 16 November 2013

நானும் நிழலில்லா இறப்பும்

நானும் நிழலில்லா இறப்பும்
**********************
எத்தனைபேரோ என் இறப்பின்
இரசனை தொட்டு உணர்வது
எத்தனை அடுக்காய் உடல் பிளக்கப்பட்டது பார்
அவர்கள் மனமெல்லாம் தெரு நாய்களின்
கழிவறை போலெ ....

Thursday, 14 November 2013

கவிஞனின் காதலி

உன் சிரிப்பொலிகளாலெ
நம் உயிரிரண்டும் புணர்கிறதே..எனக்குள்

Saturday, 9 November 2013

என்னில் மோதுகிறாய்


நீ ராசிபார்த்து
என்னில் மோதுகிறாய்...

உன்னில் பட்ட
சினங்கள் எல்லாம்
என்னை கொஞ்சும்

ஓர்நாள்...
என்னுலகம்
உன்னைத் தேடிக்கொண்டு
உன் பகைமையெல்லாம்
என்னை நாடிக்கொண்டு

உறவென்று எதுவும்
இல்லை உன்
பார்வைகளைத் தவிர

போ ..நீ
எனறு சொல்வது ஒரு
போதும் நானாகிப் போகாது

என் உயிரற்ற உடல்
வேணுமென்றால்
எனக்குத் தெரியாமல்
கூறும் தான் உலகை விட்டு
விடுதலை பெறுவதற்காய்

பறக்கத் துடிதத சிலந்திகள்



                                     
தோட்டாக்கள் துளைக்காத
இரும்பு இதயங்கள்.

Friday, 8 November 2013

என் மனக் குமிழிகள்



எல்லாக் குமிழிகளையும்
தொட்டு உடைக்கிறாய்
ஒன்று மட்டும் தொடாமல் ...

Thursday, 7 November 2013

என்னில் நீ

உயிர் பிடித்து
நடக்கிறது..
உன் முழுமையடையாத
முத்தங்களினை.........

எவருனக்கு.
கற்பித்தார்
கோபங்களிலும்
மோகம் வளர்ப்பதற்கு...


என்னில் நீ
மூழ்கும் போது
மட்டும் உறவுகளின்
வதனம்
தெரிகிறது.......

தடவிநீ
துளிர்கொள்
மெல்ல என்
இதயத்தை..

பின்னலைத்
தேடுகிறேன்..
உடலினிலெல்லாம்
கடவுளின் கலகம்.

தொடப்படாமல்
முடிவுகள்
இருக்குமென்றால்...

அந்த வரிசையில் நானும்
நிற்பேன் வரிசையின்
முதல்நிலையில்

Wednesday, 6 November 2013

உணவு

பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...

Monday, 4 November 2013

என்னை கொன்று


தானே என்னைகொன்று 
பொழுதுபோகிறது திரும்பிஉன்னிடம்..
நானே அழிவதுபற்றி 
உன்னைத்தேடும் வார்த்தை
உன் நினைவுகளைஎன் 
மனதுள்திணிப்பது வீணேஆகிறது..
நானே சொல்கிறேன்நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்

Saturday, 21 September 2013

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்