Saturday, 30 November 2013

என் எண்ணங்கள்

என் எண்ணங்கள் 
நரைத்து உன்மீது படுகிறது.
நீர்த்துளியில்எரியும்உன்காதல்மட்டும்அதை அறிந்துவிடாமலிருக்கிறது....

என் வயது முதிர்து போன இளமைக்குள்....
உன் தீரா எரி பொருளைக் கொஞ்சமேனும் நிரப்பு ...
அது தீர்ந்து 
போனதற்கு நான் காரணமில்லை
அதற்கு உன் எண்ணங்களின்
வற்றுதல் தான் காரணமாய் இருக்கும்

Monday, 4 November 2013

என்னை கொன்று


தானே என்னைகொன்று 
பொழுதுபோகிறது திரும்பிஉன்னிடம்..
நானே அழிவதுபற்றி 
உன்னைத்தேடும் வார்த்தை
உன் நினைவுகளைஎன் 
மனதுள்திணிப்பது வீணேஆகிறது..
நானே சொல்கிறேன்நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்

Sunday, 3 November 2013

என் மனப் புத்தன்.



என் மனப் புத்தன் மீது
கற்களினால்.....
அடிபட்ட காயங்கள்

Saturday, 21 September 2013

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்