Thursday, 7 November 2013

நினைவுகளின்

காகிதங்கள் 
மரங்களின்
இலைகளினோரமாய்
உரசுகிறது.

எங்கிருந்து
பிரிபட்டனவோ
அதிலேதான் இணைய 
எத்தனிக்கிறது.யாவும்
...................................................................
.............................................................
நினைவுகளின்
ஓரங்களில் நிகளும்
ஆத்ம சஞ்சரிப்பை
புரிந்துகொண்டாலன்றி.

உங்களிடத்தில்
உண்மை அன்பு
தொன்றாது...

Wednesday, 6 November 2013

என்மனதாகினாய்



என்மனதாகினாய்



விராகினி.....
தொலைவாய்

உணவு

பாலைவனங்களுக்கு
ஆயிரம் நெல் மூட்டைகளும்
பசுஞ்சோலைகளுக்கு
ஐந்துவிரலில் அடங்கும்
உணவும் வழங்கப்படுகிறதது
பிரித்துக் கொடுப்பது பற்றி கடவுளுக்கும்
புரியவில்லை...

Monday, 4 November 2013

பிரம்மனின் பிழை


                                                     பிரம்மனின் பிழை
   
பெண்மை இதயம்
தேடக் குழைத்தான்
நம் இதயம்....

Sunday, 3 November 2013

என் மனப் புத்தன்.



என் மனப் புத்தன் மீது
கற்களினால்.....
அடிபட்ட காயங்கள்

Saturday, 21 September 2013

ஸ்பரிஸக் கணைகள்




உன் ஸ்பரிஸக் கணைகள்
எலும்புகள் சிலதைப் புடைக்கிறது
என் இதய நிலை என்னவாகும்.
தெளியாத புதுக்கனவுகள்
விடைதேடும் உன் காதுகளுக்கு
ஏதோ சொல்லிக் கனைக்கிறது.....

மிக மெலிதாகிறது சிலவேளை காதல்
தங்கும் நாளங்கள்.
என் விதி காரமாக்கிறாய்
அறியாத மொழி பேசி

கட்டெனக் குலைகிறாய்
என் சட்டென
மனக் குழைவிற்காய்..
முறிபடுகிறது
என் சொற்கனவுகளும்
உன் விடையறியாத
புன்னகையால்