Saturday, 30 November 2013

என் எண்ணங்கள்

என் எண்ணங்கள் 
நரைத்து உன்மீது படுகிறது.
நீர்த்துளியில்எரியும்உன்காதல்மட்டும்அதை அறிந்துவிடாமலிருக்கிறது....

என் வயது முதிர்து போன இளமைக்குள்....
உன் தீரா எரி பொருளைக் கொஞ்சமேனும் நிரப்பு ...
அது தீர்ந்து 
போனதற்கு நான் காரணமில்லை
அதற்கு உன் எண்ணங்களின்
வற்றுதல் தான் காரணமாய் இருக்கும்

Saturday, 23 November 2013

உன் திரும்ப மறுக்கும்
கண்ணசைவுக்குள் வாழ்கிறது.
என் முதலான உயிர்.

Tuesday, 19 November 2013

அதோ நீ மேகமாய்......


அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்

இன்னும் வரையப்படாத கோடுகளை

பொய் பிழைத்தால் சரியாகிவிடும்

எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது தவிக்கும் உணர்வு

நான் என்னைக் கடக்கயில் உனக்குள் விழுந்து விடுகிறேன்.

இதோ ஒரு புதிய மனிதன்



நியமில்லாது நிழலைத் தொடர்வது போல்
பறக்கிறது என்னில் மோதி ஒன்றுபார் அதையே நிறம்மாறி தொடர்கிறேன்.....

Monday, 18 November 2013

சலீமுனான்

மொழிகள் பிழைபடுகின்ற 
குழந்தைகள் போல் பாடல் பாடுகிறது
எப்பொதும் போலல்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறது..
முகார ஒலிகளைப் புறந்தள்ளும் 
பாடல்வரிகள் .....

Saturday, 16 November 2013

வாழ்வின் சிந்தனை சுருக்கம்பற்றி


நாறாய்ச் சேறு பிழிவது 
அது ஒரு இறவாப் பிண்டம்
கனதியானதும் மெதுவாய்ப் படித்தாலும்
கண்களைத் தின்றும் 
சிலவேளை நசித்தும்
காரணங்களற்ற 
பார்வைகள் கொடுத்தும் ஆனால்
கருத்துக்கள் ஆழமானவையாகவும்
நிறுத்து!!! 
ஒருவனின் கேழ்வி இது.. 
சிந்திவிடாதிருக்கும் நனைந்து தொங்கும் ஒரு
ஈரமற்ற துணி போலா?
அது காயமற்று உயிரற்றிருக்கும் உடலா?
பதிலளிக்கிறான்.
இல்லை !!!!
வெறுமையுடன் செழிப்பாயிருக்கும்
இந்த வாழ்வுதான் அது.......

நினைக்காதல்

இருளின் ஸ்பரிஸத்தை
ஏற்றுக்கொண்டு விண்மீன்கள்
துளிகளில் முகர்ந்து கொண்டு வீணையின் இசையுடன்
தோனிப்பாட்டுக்கிழியும் தொகுதிகளாய்
பறந்தபடி பாடிச்செல்கிறது.
ஓர் பறவை....

அவள் பார்வை..
எனக்குள் நிழலாடுவதைப்
பார்த்த காரணங்களினாலே..