
என் கண்ணாடி விழிகள் கூட
மறுத்தது வலிகள் கடப்பதாய்
எண்ணும் எண்ணங்களை இல்லை...அது
பரவியே முதல் விழி திறந்தது
உனக்குள் திறந்ததை அது இசைதான்
முழுமையும் தேடு
வாசல் கதவுகளற்றும் சில
துவாரங்களினாலும் உள்செலுத்து
உடைந்துவிடாது.........உனக்குள் திறக்கப்பட்டதா
இல்லை உடல் நனைத்த இரவுகளால் உருவானதோ
இல்லை அது இருந்தது....
இரு இமை திறக்கிறது உள்ளே விழிகள் அற்று
பார் ... முகாந்திரமான விரிசலான இசையுடன்
வெளிவருகிறது...
அது. .. பேரிரைச்சலுடன் உன்னை மோதி இறக்கிறதா
உயிர் கருக் கலைந்து வாழ்வில் மோதுகிறதா
அழிக்கிறதா மிச்சமிடாமல் இனிய தருணங்களை
மிகவும் அன்போடு திறக்கப்பட்டது
கனவு மெய்க்காவலில் இருந்து தப்பிக்க
ஏதாவது உற்பத்தி இசையை கடன் கேட்கிறதா..
அதுதான் நீ மயக்கம் தெளிந்த
பொழுதுதான் ஞாபகம் அதற்கில்லை
அதுதானே ஞாபகததில் வைத்துக் கொள்ளட்டும்..
கனவு மெய்க்காவலில் இருந்து தப்பிக்க
ஏதாவது உற்பத்தி இசையை கடன் கேட்கிறதா..
அதுதான் நீ மயக்கம் தெளிந்த
பொழுதுதான் ஞாபகம் அதற்கில்லை
அதுதானே ஞாபகததில் வைத்துக் கொள்ளட்டும்..