Wednesday, 8 October 2014






அந்த இருளுக்குள் பேசத்தெரியாத பல மௌனங்கள்
அடைபட்டுக்கிடக்கிறது..

இருளினிடத்து
இரயில் பயணங்களாய் அவள் பார்வைகள்
எதிரே நகர்ந்து செல்கிறது ...
பார்க்க முடியாத படிக்கு...


செல்லிடத்தோணிகள் கூட
மூழ்கிக் கொண்டிருக்கிறது
அந்த அலைகளுக்கான காரணங்களுக்காக..

நான் செய்திகளை கூட அலைகளின் மூலமே அனுப்புகிறேன்
அதுதான் இலகுவில் மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறேன்..

ஏனெனில் என் தொடர்புகள் யாவும் அவளுக்கு அலைகளின்
மூலமான் அழகிய மூங்கில் குழலிசையே..

அதுதான் அவள இன்னமும் உணரமுடியாமலும்
மொழிபெயர்க்கமுடியாமலும் ....

Friday, 30 May 2014





உன்னை நட்சத்திர துகள்கொண்டு
யாத்திருக்க வேண்டும் இறைவன்
அல்லது உன்னை நேசிக்கும்
என் மனம் எப்படிப் பிரகாசிக்கிறது
இவ்வளவு ஒளியுடன்....
.............................................................
தொலைவில் கேட்கும் பாடல்
கடந்தும் மறக்கப்படாத
உன் காதலியின் இரசநிழல்........


.............................................................


விடைகள்
தன்னைக் கூறமுடியாத
வினாக்களை நம் ஒவ்வொருவருக்காகவும்
சொல்லிக்கொடுக்கிறது
நம் வாழ்வுப் பாதையில்.......


.................................................
என் வயதுச் செடியில்
பூக்கிறது
பறந்து திரியும்
அவள் மனத்தேனிக்கள்...





Thursday, 20 March 2014

கல் வாழ்




உன் மனம் கல் வாழ்
போன காலங்களெல்லாம்
வெறும் வாழாய் எனைக்
கீறிக் கிழித்துக்கொண்டிருந்ததில்
மகிழ்ந்திருந்தேன்........ இன்று


என் உண்மைச் 
சாயல் காலகதியில்
மூழ்கடிக்கப்பட்டுவிடும்.........

அது போகும் பாதை 
எல்லோரையும் அலக்கழிக்கிறது

வீணான விவாதங்கள்
சிரிக்கிறது ...  என் மனித நேயத்தைப்
பார்த்து தம்மை  அடைக்கலப்படுத்திவிட்டேனென்று.

என்னையும் சேர்த்து 
அந்த விவாதங்கள்  கொண்டுசென்று ..
மோகம் தனைத்துறந்ததாய்
சொல்லும் கானலுக்குள் அடைத்துவிடும்...

இவ்வளவும் கற்பப் பைக்குள் 
திணித்திருக்கிறார்கள் 

என்னை இறுதியில் பாவங்களுடன்
அனுப்புவிடும் இந்த மனித குலம்...

Tuesday, 18 March 2014

தூலப்பொருள்



தூலப்பொருளாயும் தொலைத்த
பொருளாயும் ......
காலப் பெருவெளியாகவும்
கனிந்து எனைமேவும் இரவாகவும்
........................
தீக்கிடை சேரும் மனதை
நீ பூக்கடையாக்கினாய்......
நீ விழிகளற்ற தரிசனம் போலே
தினம் சேரும் வளிதெரியாமல்
தவிக்கிறேன்....

போ நீ..எல்லைகளற்று ஏதோ ஓர் முடிவில்
என்னுணர்வு உன்னைத் தீண்டும் தன்மையாகி
உன்னைத் தேடி வரும்

........................................
நிகழ் காலப்புன்னகையை
உண்மையென்று நம்பிக்கிடக்கும்
இதயத்திற்கு எப்படி விபரிப்பேன்
காலமே இல்லாமையிலிருந்து
தோன்றுகிறதென்று......



Thursday, 13 March 2014


நீ கால கதியில்
விட்டுப் பிரிவேனென்கிறாய்
என் மனம் கடுகதியில்
வருமென்பதை மறந்து...


Thursday, 6 March 2014

விலகுவதாகும் மனதில்


விலகுதாகும் மனதில்
தொலைவினிலாடும் முகம் நோக்கி
என் இதயம் கிறங்கி சுற்றுகிறேன்....

தொலைவதாகும் என் எண்ணங்களை விட
நெருங்குவதாகிறது மோதலைப் பாதுகாக்கும்
உன' ஒரு சொல்.......................

நானும் பிணமாகித் தொலைகிறேன்
உன' வியாக்கியானங்களால்....

நீ இனி என்னுள் வந்து  பாடு
மொழிகளற்ற புதுமையான இசையுடன்......


Wednesday, 5 March 2014

நிலைகாணாமல் தவிக்கிறது


ஒவ்வோர் முறையும் தடைகள் தாண்டி துடிக்கிறது ஏதோ ஒன்று தேடி 

நிலைகாணாமல் தவிக்கிறது

உள்ளே ஆழமாய்ச் சென்றாலும் மனக்

கோது மட்டும் நின்று ஊசலாடுகிறது

மனங்காணும் இந்த வாழ்க்கையின்

சிறு தேடல் பொய்யா

என ஊகம் கொள்ளும்

மனமும் பொய்யாகிப் புண்ணாகிறது....



இனியும் இரவுகள் ஏறி காலம் கழியுமோ

இந்தப் புளுக்களுககு

வடுக்களுக்கு மட்டுமே

தெரியும் இந்தப் புனித உலகின் விழிப்புப் பற்றி

மோதுகின்ற கண்களில் தேடல்கள் தொலைந்து கிடக்கிறது

வாடுகின்ற மனங்களையே கண்களும் காண்பிக்கிறது

எல்லாப் புனிதங்களும் கரையொதுங்கிக் கொள்கிறது

பயனில்லாச் சருகுகளை தேடிக்களைத்துப்போனேன்

என எண்ணிக் தொனித்த குரலில் பாடுகிறது தான்

விரும்பிய பாடலை மனது....................




எத்தனை முறை உலகத்துக்காய் நான் தலை சாய்த்திருக்கிறேன்

என் இலட்சியம் மறந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்

அது வெறும் சாரல்கள் போல் எனக்குள் வந்து இடையிடையே

தன் மகிழ்ச்சிகளை என் மீது பொழிவதில் எனக்கு

உடன்பாடல்லை.....


இங்கே வற்றாத குளிர் மேகத்தில் அடைந்து கிடக்கிறேன்

கொஞ்சக்காலம் மனித முகங்களை பார்க்காது....